
பரிசோதனையில் குழந்தையை பாஸ்கல் கற்பழிக்க முயன்றது உறுதியானது. மருத்துவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சுஜா போலீசில் தனது கணவர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தார். முதலில் வழக்குப் பதிவு செய்ய மறுத்த போலீசார் பிறகு மூத்த வழக்கறிஞர் பிரமிளா நெசர்கியின் தலையீட்டையடுத்து வழக்குப் பதிவு செய்தனர்.
இருப்பினும் பிற நாட்டு தூதரகத்தை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டுமெனில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி பாஸ்கலை கைது செய்வதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் பெங்களூர் போலீசார் அனுமதி கோரியிருந்தனர்.
தற்போது அதற்கான அனுமதியை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்துள்ளது. இதனையடுத்து பாஸ்கல் கைது செய்யப்பட்டு, பாஸ்கலை விசாரிப்பதற்காக போலீசார் அவரை தங்கள் காவலில் எடுக்க இருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக