
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மேனகா காந்தி ஏற்கெனவே பிரணாப் முகர்ஜி வீட்டுக்கே சென்று ஆதரவு தெரிவித்துவிட்டு வந்தார். எப்படா காங்கிரஸ் வாசல் திறக்கும் என்று காத்துக் கொண்டிருந்த எதியூரப்பாவுக்கு வழிகாட்டிவிட்டார் மேனகா காந்தி. கர்நாடக முதல்வர் பதவி கேட்டு ஓய்ந்துபோன எதியூரப்பா நேற்றுதான் தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூலமாக சதானந்த கவுடாவுக்கு 3 நாள் கெடு விதித்திருக்கிறார்.. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்ட.
இந்நிலையில் அடுத்த அதிரடியாக பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் எதியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பிரணாப்புக்கு வாக்களிக்கக் கூடும். இதைவைத்துக் கொண்டு காங்கிரசின் கரிசனையை பெற்றுவிடலாம் என்பதே அவரது கணக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக