
அவர் கூறுகையில், ஐரோப்பிய பொருளாதார சிக்கல் காரணமாக சர்வதேச அளவில் பிரச்சனைகள் எழுந்துள்ளன. மேலும் இந்தியா, சீனா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளும் இதன் தாக்கத்தை சந்திக்க ஆரம்பித்துள்ளன.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதற்கு ஐரோப்பிய சிக்கலே முக்கிய காரணம். இதனால், ஐரோப்பிய நிதிச் சிக்கலுக்குத் தீர்வு காண சர்வதேச பொருளாதார நிதியம் எடுக்கவுள்ள நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டியது அனைத்து நாடுகளின் கடமையாகும்.
இதனால் தான் முதல்கட்டமாக ரூ. 50,000 கோடியை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளுக்கு தேவைப்படும் பெரும் முதலீடுகள் நின்றுவிட்டன. இது பெரும் கவலை தரும் அம்சமாகும். இந்தியாவில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை பெரும் முதலீட்டில் வேகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக சரிந்துள்ளது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, இவ்வளவு சர்வதேச சிக்கல்களுக்கு மத்தியிலும் இந்தியா 6.9 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறதே என்று சந்தோஷப்பட தோன்றும். ஆனால், இந்த வளர்ச்சி இந்தியர்களுக்கு போதுமானதாக இல்லை. எங்கள் நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் 8 முதல் 9 சதவீத வளர்ச்சி தேவை.
இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் பலமாக உள்ளது. இதனால், இந்த வளர்ச்சியை மீண்டும் எட்டிக் காட்டுவோம் என்றார் மன்மோகன் சிங்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக