செவ்வாய், ஜூலை 30, 2013

எகிப்து: மிரட்டிய ராணுவம்! நிராகரித்த மக்கள்!

கெய்ரோ: கெய்ரோவில் மக்கள் எழுச்சிப்போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்றும் இல்லையெனில் பலம் பிரயோகித்து நீக்கம் செய்வோம் என்றும் ராணுவ சர்வாதிகார அரசு விடுத்த மிரட்டலை ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நிராகரித்துவிட்டனர். ஜனநாயாகரீதியில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கபப்ட்ட முஹம்மது முர்ஸியிடம் மீண்டும் அதிபர் பதவியை ஒப்படைக்கும் வரை நகரத்தை விட்டு வெளியேறமாட்டோம் என்றும் முந்தைய பிரகடனத்தில் மாற்றமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கெய்ரோவில் ராபிஆ அல் அதபிய்யாவை மையமாக கொண்டு நடக்கும் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ராணுவம் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூட்டில் நூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோருக்கு காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ராணுவ அரசு மிரட்டல் விடுத்துள்ளது.ராணுவ சர்வாதிகார அரசில் உள்துறை அமைச்சராக உள்ள முஹம்மது இப்ராஹீம் என்பவர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
ராபிஆ அல் அதவிய்யாவில் தினந்தோறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தங்களின் கோரிக்கை ஏற்கப்படும் வரை இப்பகுதியில் இருந்து வெளியேறமாட்டோம் என்றும் இஃவானுல் முஸ்லிமீனின் செய்தி தொடர்பாளர் ஜிஹாத் அல் ஹத்தாத் தெரிவித்துள்ளார். குழந்தைகளும், பெண்களும் கலந்துகொண்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் அணி திரண்டுள்ள போராட்டம் அமைதியாக நடக்கிறது. ராணுவ புரட்சியின் மூலம் வரவிருக்கு துயரங்கள் குறித்தும், அடக்கு முறை ஆட்சியைக்குறித்தும் மக்கள் விழிப்புணர்வு பெறத்துவங்கியுள்ளார்கள் என்பது பேரணிகளில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி: தேஜஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக