செவ்வாய், ஜூலை 09, 2013

கேரளா:முஸ்லிம் இளைஞர் படுகொலை! சங்கபரிவார பாசிஸ்டுகள் வெறிச்செயல்!

காஸார்கோடு: கேரள மாநிலம் காசர்கோட்டில் நேற்று (07/07) காலை ஸாபித் (18) என்ற முஸ்லிம் இளைஞர் பயங்கர ஆயதங்களுடன் வந்த சங்க்பரிவார தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.


நகரின் “பென்செர் ஜங்க்ஷன்” என்ற இடத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் ஸாபித், விடுமுறை நாளான நேற்று, தனது நண்பர் ரயீஸ் என்பவருடன் மீபுகுறி என்ற பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த சங்க்பரிவார தீவிரவாதிகள், அவர்கள் மீது கடும் தாக்குதலை நடத்திவிட்டு கர்நாடகா சங்க்பரிவார மையத்துக்கு  தப்பித்துச் செல்ல முயன்றனர். இந்நிலையில் சங்க்பரிவார கும்பலைச் சார்ந்த  எட்டுபேரை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.

சங்க்பரிவார தீவிரவாதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் காசர்கோடு அரசு மருத்துவமையில் அனுமதிக்கப்பட்ட ஸாபித், சிறிது நேரத்துக்குள்ளாகவே மரணமடைந்து விட்டார். இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதால், நேற்று மாலை முதல் காசர்கோட்டில் கடும் பதட்டம் நிலவி வருகிறது. ஸாபித்தின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சபீத்திற்கு பெற்றோரும், நான்கு சகோதரர்களும் உள்ளனர்.

ஸாபித் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, பேருந்துகள் பணிமனைகளுக்கு திருப்பி விடப்பட்டு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காஸர்கோடு வித்யா நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஸர்கோட்டில் கடந்த 3ஆண்டுகளில் 3 முஸ்லிம்களின் உயிர் சங்க்பரிவார தீவிரவாதிகளால் பறிக்கப்பட்டுள்ளது. நேற்று கொலைச் செய்யப்பட்ட ஸாபித் ப்ளஸ் டூ முடித்துவிட்டு பட்டப்படிப்பிற்கு சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். கடந்த 3 ஆண்டுகளில் கொலைச் செய்யப்பட்ட 3 முஸ்லிம்களும் எந்த அரசியல், சமூக இயக்கங்களில் உறுப்பினர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைத்து வகுப்புவாத வெறியை வளர்த்து அராஜகம் புரிவதே சங்க்பரிவார பயங்கரவாதிகளின் நோக்கம் என்பது இச்சம்பவம் மூலம் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக