செவ்வாய், ஜூலை 30, 2013

குஜராத்: உணர்ச்சியை தூண்டும் துண்டுபிரசுரங்களை ஹிந்துத்துவா அமைப்புகள் விநியோகித்தன! - ஸாகியா ஜாஃப்ரி!

அஹ்மதாபாத்: கோத்ரா ரெயில் தீ விபத்தில் பலியானவர்களின் உடல்களை அஹ்மதாபாத்தில் காட்சிக்கு வைக்கும் முன்பாக ஹிந்துத்துவா அமைப்புகள் விநியோகித்த துவேஷம் உருவாக்கும் துண்டுபிரசுரங்களை குறித்து அன்றைய குஜராத் உள்துறை விவகார கூடுதல் முதன்மை செயலாளர் அசோக் நாராயண் முதல்வர் மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதிலும், அதனை மோடி பொருட்டாக எடுக்கவில்லை என்று ஸாகியா ஜாஃப்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

2002-ஆம் ஆண்டு இந்திய வரலாறு காணாத முஸ்லிம் இனப்படுகொலையின் போது நிகழ்த்தப்பட்ட குல்பர்க் சொஸைட்டி கொடூர கூட்டுப்படுகொலையில் ஹிந்து பயங்கரவாதிகளால் வெட்டி, எரித்துக் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃபிரியின் மனைவிதான் ஸாகியா ஜாஃப்ரி. சிறுபான்மை சமூகத்தை சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் அழைப்பு விடுக்கும் துண்டுபிரசுரத்தின் நகல்களை வெள்ளிக்கிழமை வழக்கின் விசாரணை நடக்கும் மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஸாகியா ஜாஃப்ரியின் வழக்குரைஞர் தாக்கல் செய்தார்.
சிறப்பு புலனாய்வுக்குழுவின்(எஸ்.ஐ.டி) அதிகாரியான ஏ.கே.மல்ஹோத்ரா, இந்த துண்டுப்பிரசுரத்தை தனது முதல் அறிக்கையில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். ஆனால், இறுதி அறிக்கையில் இதனை உட்படுத்தவில்லை என்று வழக்குரைஞர் மிஹிர் தேசாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த துண்டுப் பிரசுரம் தான் அசோக் நாராயணுக்கு கிடைத்தது. இதனை மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் அவர் இதனை பொருட்டாக மதிக்கவில்லை என்று எஸ்.ஐ.டியிடம் அசோக் நாராயண் தெரிவித்திருந்தார். 
ஆனால், எஸ்.ஐ.டி இவ்விவகாரத்தை தீவிரமாக எடுக்கவோ, துண்டுப்பிரசுரம் தொடர்பாக விசாரணை நடத்தவோ செய்யவில்லை. இதன் பின்னணியில் சதி இருப்பதாக வழக்குரைஞர் குற்றம் சாட்டினார். 58 பேரின் மரணத்திற்கு காரணமான சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீ விபத்து ஏற்பட்ட நாள் முதல் வகுப்பு கலவரத்திற்கு மாநிலத்தில் சத்திட்டம் நடந்துவந்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
செய்தி: தேஜஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக