திங்கள், ஜூலை 29, 2013

மோடிக்கு எதிரான கடிதத்தில் இருப்பது உண்மையான கையெழுத்துதான்! - அமெரிக்கா

நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அரசு விசா வழங்கக் கூடாது என வலியுறுத்தி, இந்திய எம்.பி.க்கள் 65 பேர் கையெழுத்திட்டு அனுப்பியதாக கூறப்பட்ட கடிதத்தில் உள்ள கையெழுத்துகள் உண்மையானவைதான் என அமெரிக்கத் தடயவியல் நிபுணர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடயவியல் நிபுணரான நாண்டீ பார்டோ, இந்திய எம்.பி.க்களால் கையெழுத்திட்டு, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பியதாக கூறப்படும் 2 கடிதங்களையும் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் அளித்த அறிக்கையில், தடயவியல் ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் முறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடிதத்தின் 3 பக்கங்களில் இருந்த எம்.பி.க்களின் கையொப்பங்கள், போலியானவை அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும், சிலர் கூறியது போன்று வேறு ஒரு இடத்தில் இருந்த கையெழுத்தை, இந்தக் கடிதத்தில் பிரதி எடுத்ததாக கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.
ஆனால் கடந்தாண்டு நவம்பர் மாத இறுதியில், அதிபர் ஒபாமாவுக்கு தொலைநகல் மூலமாக அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதத்தில், கையெழுத்திடவில்லை என எம்.பி.க்கள், சீதாராம் யெச்சூரி, கே.பி.ராமலிங்கம், அச்சுதன் உள்ளிட்டோர் மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக