வெள்ளி, ஜூலை 19, 2013

இஸ்ரேலின் மிரட்டலை சிரித்து நிராகரித்த ஈரான் அதிபர்!

டெஹ்ரான்: ஈரானை தாக்குவோம் என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மிரட்டலை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி சிரித்து விட்டு நிராகரித்துள்ளார்.

ரூஹானி செய்தியாளர்களிடம் கூறியது: இதுபோன்ற மிரட்டல்களை அவர்கள் முன்னரும் வெளியிட்டிருந்தனர். அனைத்துப் பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இஸ்ரேலோ நாங்கள் உடனடியாக ஈரானை தாக்குவோம் என்று கூறுகின்றது. இத்தகைய மிரட்டல்களை சிரித்து விட்டு நிராகரிக்கவே முடியும் என்று தெரிவித்துள்ளார்.

செய்தி: தேஜஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக