புதன், ஜூலை 31, 2013

கேரளா கல்லூரியில் வெடிகுண்டு வீசி தாக்குதல்!- பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யினர் கைது!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மகாத்மா காந்தி கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்பான ஏபிவிபி மாணவர் அமைப்பினர் நாட்டு வெடிக்குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

கேரளாவில் உள்ள பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவ அமைப்புகள் அரசியல் நடத்த கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் திருவனந்தபுரம் மகாத்மா காந்தி கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் ஆர்.எஸ்.எஸின் கிளை அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் சங்கம் அமைத்து செயல்பட்டதாக கூறி சில மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் நேற்றுமுன்தினம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். நேற்றும் இந்த போராட்டம் நீடித்தது. அப்போது முகமூடி அணிந்து கொண்டு பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் கல்லூரிக்குள் சென்று பெட்ரோல் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
மேலும் மாணவர்கள் கல்லூரியின் முன் பக்க கதவை மூடி சம்பவத்தை தடுக்க வந்த போலீசாரை உள்ளே வர விடாமல் தடுத்தனர். பின்னர் போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. சில மாணவர்கள் கல்லூரியின் ஆய்வகம், அறிவிப்பு பலகைகள், கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர்.
இதையடுத்து போலீசார் கல்லூரிக்குள் புகுந்து கல்வீச்சு மற்றும் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் உள்பட 15 பேரை கைது செய்தனர். அவர்கள் பேரூர்கடை போலீஸ்நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தகவல் அறிந்ததும் பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாநில நிர்வாகிகள், போலீஸ்நிலையம் சென்று கைதானவர்களை விடுவிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர். அதன்படி காலை 6 மணி முதல் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. 
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு பஸ்களும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக