செவ்வாய், ஜூலை 23, 2013

இந்துத்துவாவின் அடிப்படையில் நாட்டை வலுப்படுத்த போகிறதாம் ஆர்.எஸ்.எஸ்!

பாட்னா: இந்துத்துவத்தின் அடிப்படையில் வலுவான நாட்டை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கம் என்று அதன் தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கிறார். பீகார் மாநிலம் பாட்னாவில் சிராவண பெளர்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் கூறியது: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) குறிக்கோள்கள், செயல்பாடுகள் குறித்து அறியாததால் அந்த இயக்கத்தைப் பற்றி பல காரணங்களுக்காக பல தவறான கருத்துகள் நிலவிவருகிறது. சமூகத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வந்து, இந்தியாவை வலுவுள்ள நாடாக உருவாக்கும் பெரும் கடமையில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டிருக்கிறது. இந்துத்துவ அடிப்படையில் வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செயல்பாடுகளின் நோக்கம். இந்துத்துவம்தான் இந்தியாவின் அடிப்படையும் அடையாளமுமாகும். இந்துத்துவத்தை ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கோட்பாடாக எண்ணுவது தவறு.

ஒரு கட்சியின் மூலக் கருவாக ஆர்.எஸ்.எஸ்ஸை எண்ணுவதும் தவறு. ஒரு அரசியல் தலைவர் அல்லது அரசியல் கட்சியால் ஒரு நாட்டை வலுவுள்ளதாக உருவாக்க முடியாது. சரியான தத்துவ கோட்பாடுகளின் அடிப்படையில் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தினால்தான் நாடு வலுவடையும். மாற்றம் என்பது சமூகத்திலிருந்துதான் ஏற்படுமே தவிர, ஒரு அரசியல் கட்சியால் ஏற்பட்டுவிடாது. அதிகாரத்தில் இருப்பவர்களை மாற்றிவிடுவதால் மட்டும் மாற்றம் வந்துவிடாது என்று மோகன் பாகவத் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக