செவ்வாய், ஜூலை 16, 2013

எகிப்து: புனித நோன்புடன் தொடரும் முர்ஸிக்கு ஆதரவான உணர்வு ரீதியான போராட்டம்!

எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான முதலாவது ஜனாதிபதி முஹம்மது முர்சி இராணுவ சதி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டு இரு வாரங்களை எட்டும் நிலை முர்சி ஆதரவாளர்கள் தலைநகர் கெய்ரோவில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

கெய்ரோவின் நஸ்ர் நகரின் ரபா அல் அதவியா பள்ளிவாசலுக்கு வெளியில், இரவு பகல் என முர்சி ஆதரவாளர்கள் தரித்துள்ளனர். இவர்கள் முகாமிட்டிருக்கும் பகுதிக்கு அருகிலுள்ள பாதுகாப்பு படையின் தலைமை கட்டடத்திலேயே பதவி கவிழ்க்கப்பட்ட முர்சி ரகசியமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.

“எமக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறது. எமது சட்டபூர்வ உரிமை மீறப்படுகிறது. எமக்கு எமது உரிமை வேண்டும். நாம் அளித்த வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்” என்று முர்சி முகாமில் இருக்கும் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி விரிவுரையாளர் இஸ்ஸாம் அல் தீன் இஸ்மாயீல் குறிப்பிட்டார். “இந்த ஆர்ப்பாட்டம் முடியும் வரை நாம் இங்கு இருப்போம். முர்சியின் அதிகாரம் மீண்டும் வழங்கப்படும் வரை ஆர்ப்பாட்டம் முடியாது” என நோன்பு நோற்றிருக்கும் கலைப்புடன் இஸ்ஸாம் அல் தீன் இஸ்மாயீல் விபரித்தார்.

ஆங்காங்கே கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ள முர்சி ஆதரவு முகாமில் பொதுவான சமயல் செய்யும் பகுதி, நடமாடும் மருத்துவமனை முடிவெட்டு பவர்கள் என அன்றாட தேவைகளுக்கான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்கு தரித்து நிற்பதற்கு தயாராகவே அந்த முகாம் அமைந்துள்ளது.

புனித ரமழான் மாதம் ஆரம்பமானது தொடக்கம் 14 மணி நேரம் நோன்பு நோற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களில் ஓய்வு எடுத்துக் கொள்கிறார்கள். பெண்கள் அவர்களுக்கான தனி கூடாரங்களில் தரித்துள்ளனர். அங்கு நிலவும் கடும் வெப் பத்தை தணிப்ப தற்கு நீர் குழாய்களை ஏந்திய வாறு ஒருசிலர் முகாமிற் குள் நடமாடிக் கொண்டி ருக்கிறார்கள். இவர்கள் அங்கிருப் போருக்கு சூட்டை தனிக்க தண் ணீரை பீச்சியடிக் கிறார்கள். மேலும் ஒருசில இளை ஞர்கள் கூடாரங்களை குளிரூட்டு வதற்காக ஐஸ்கட்டிகளை விநியோகித்து வருகிறார்கள்.

இங்கிருக்கும் ஒரு சிலர் புனித அல்குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர் உறங்கிக் கொண்டிருக் கிறார்கள். பதவி கவிழ்க்கப்பட்ட முஹம்மது முர்சியின் பதவியை மீண்டும் வழங்கச் செய்ய அழுத்தம் கொடுப்பதே இவர்களது ஒரே இலக்காகும். எனினும் நோன்புடன் கெய்ரோவில் நிலவும் கடும் வெப்பம் இவர்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

“நாம் நோன்பு பிடித்தாலும் அல்லது பிடிக்காவிட்டாலும் இறைவன் எமக்கு உதவுவான். ஏனென்றால் நாம் எமது உரிமைக்காகவே போராடுகிறோம்” என நஸ்ர் நகர வாயிலில் முர்சி ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பாக அங்கு நுழைவோரை சோதனையிட்டுவரும் சுமார் 20 காவலர்களில் ஒருவரான விளையாட்டுத் துறை ஆசிரியர் அஹமத் கலில் குறிப்பிட்டார். “நாம் எமது இலக்கை எட்டுவதில் உறுதியாக இருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

ஓர் ஆண்டுக்கு முன் இடம்பெற்ற எகிப்து ஜனாதிபதி தேர்தலில் 51 வீத வாக்குகளை வென்று வெற்றியீட்டிய முஹம்மது முர்சியை பதவி கவிழ்த்தது ஜனநாயகத்திற்கு எதிரான சட்டவிரோத செயல் என ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர். 90 டிகிரி வெப்பம் நிலவும் நஸ்ர் நகரில் முர்சி ஆதரவாளர்கள் தொடர்ந்து உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.

இங்கு இருவர் 10 அடி உயர கம்பத்தில் ஏறி குர்ஆனை ஓதியும் பிரார்த்தனை செய்து கொண்டும் இருந்தனர். கீழே இருக்கும் நூற்றுக்கணக்கான முர்சி ஆதரவாளர்கள் எகிப்து கொடியை அசைத்தவாறு தமது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். இந்த சூழல் ஒரு அரசியல் எதிர்ப்பு பேரணியை விடவும் மக்காவில் ஹஜ் செய்யும் உணர்வையே ஏற்படுத்துவதாக அங்கு இருக்கும் பெண் ஒருவர் குறிப்பிட்டார். எனினும் நோன்பு எம்மை மேலும் வலுப்படச் செய்வதாக ஆங்கில விரிவுரையாளர் இஸ்மாயீல் விபரித்தார்.

“உண்மையென்னவென்றால் நோன்பு எம்மை மேலும் வலுவூட்டி பலம் பெறச் செய்கிறது. ஏனென்றால் எமக்கு இறைவனுடன் நெருங்கிய உறவை நோன்பு ஏற்படுத்தியிருக்கிறது. நாம் சூரிய வெப்பத்திற்கு மத்தியில் இறைவனை தொழுது பிரார்த்திக்கிறோம். எமக்கு வெற்றியை தர இறைவனை அழைக்கிறோம். இறைவன் நாடினால் அதனை நாம் எட்டுவோம்” என்று இஸ்மாயீல் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழலை முர்சி ஆதரவு முகாமிலிருக்கும் பெண் ஒருவர் இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட போராட்டங்களுடன் விபரித்து விளக்குகிறார். “ரமழான் இஸ்லாமிய வெற்றியின் மாதம்” என்று குறிப்பிடுகிறார் 46 வயதான இலக்கியப் பிரிவு விரிவுரையாளர் டொக்டர் வபா ஹப்னி “நாம் இங்கு கொல்லப்படக்கூடும். ஒன்று முர்சி அதிகாரத்திற்கு வருவார் அல்லது நாம் பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்படுவோம். ஆனால் நாம் நிறுத்த மாட்டோம்” என்று அவர் கூறினார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக