செவ்வாய், ஜூலை 30, 2013

"மணிப்பூரின் இரும்பு மங்கை" ஐரோம் சர்மிளா 80 புத்தகங்களை நூலகத்திற்கு இலவசமாக வழங்கினார்!

மணிப்பூர் மாநிலம் தலைநகர் இம்பால் விமான நிலையம் அருகே கடந்த 2000ம் ஆண்டு, பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த 10 அப்பாவி பொதுமக்களை அசாம் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அப்பாவி மக்களை விசாரணை இன்றி சுட்டுக் கொல்லும் வகையில் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள ராணுவ சிறப்பு அதிகார ஆயுதப் படைச்சட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 12 ஆண்டுகளாக மணிப்பூரின் இரும்பு மங்கை என்றழைக்கப்படும் இரோம் ஷர்மிளா தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

இரோம் ஷர்மிளா ஒரு புத்தகப் பிரியர். பல வரலாற்று நூல்களையும், தலைவர்களின் புத்தகங்களையும் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர் மணிப்பூர் மாநில மத்திய நூலகத்திற்கு 80 நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதுவரை மொத்தம் 400 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இரோம் ஷர்மிளா கூறியதாவது, நான் எந்த ஒரு புத்தகத்தையும் விரும்பி படிக்கக்கூடியவர். நான் படித்த முடித்த புத்தகங்களை, மற்றவர்ளும் படித்து பயன்பெற வேண்டும் என்று நோக்கத்தோடு இதுபோன்று நூலகங்களுக்கு வழங்கி விடுவேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக