இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அவருடன் அநியாயமாக கொல்லப்பட்ட இஷான் ஜோஹர், அம்ஜத் அலி ராணா ஆகியோர் தொடர்பாக நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் அளிக்கப்படும் என்று சிபிஐ அறிவித்துள்ளது.
2004-ம் ஆண்டில் இஷ்ரத் ஜஹான் உள்பட 4 பேர் குஜராத்தில் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இது போலி என்கவுண்டர் என்ற குற்றச்சாட்டின் பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இஷ்ரத் மற்றும் ஜாவேத் குறித்த தகவல்கள் கிடைத்த போதிலும், ஜோஹர் மற்றும் ராணா ஆகியோர் குறித்த தகவல்கள் சி.பி.ஐயிடம் இல்லை. இவர்கள் இருவரும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் உள்ள வி.ஐ.பிக்களை கொல்ல வந்தவர்கள் என்று குஜராத் போலீஸ், எஃப்.ஐ.ஆரில் கூறியுள்ளது.
இந்நிலையில் ஜோஹர், ராணா ஆகியோரது புகைப்படங்களுடன் ஜம்மு-காஷ்மீரில் வெளியாகும் உருது பத்திரிகைகளில் சிபிஐ விளம்பரம் கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்பான நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர்களின் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை சிபிஐ செய்தித் தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா டெல்லியில் புதன்கிழமை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக