திங்கள், ஜூலை 29, 2013

78 பேரின் உயிரை காவு வாங்கிய பேஸ்புக்? ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம்! (வீடியோ இணைப்பு)

ஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத்திற்கு டிரைவர் பேஸ்புக்கில் அப்டேட் செய்தபடி ரயிலை ஓட்டியதே காரணம் என தெரியவந்துள்ளது. ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் கடந்த 25ம் திகதி ரயில் ஒன்று தடம் புரண்டதில் 78 பேர் பலியாயினர்.
80 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய வளைவு பாதையில் 200 கி.மீ. வேகத்தில் ரயில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. மேலும் விபத்துக்குள்ளான ரயிலில் 2 ஓட்டுநர்கள் இருந்துள்ளனர், இதில் பிரான்சிஸ்கோ ஜோஸ் கர்சான் அமோ(வயது 52) என்பவர் ரயிலை ஓட்டியபோதுதான் விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது கர்சான் கவனக்குறைவாக ரயிலை இயக்கியதும், பேஸ்புக்கில் அப்டேட் செய்த படி ரயிலை ஓட்டியதும் காரணம் என தெரியவந்துள்ளது. அதாவது, ரயில் விபத்துக்கு முன்பாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், 200 கி.மீ. வேகத்தை காட்டும் ஸ்பீடாமீட்டர் படத்தை வெளியிட்டு, ’நான் உச்சகட்ட வேகத்தில் இருக்கிறேன், இதை விட வேகமாக போனால் எனக்கு அபராதம் விதிப்பார்கள்’ என்று கமெண்ட் எழுதியுள்ளார்.
இதனையடுத்து கர்சான் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக