திங்கள், ஜூலை 29, 2013

எகிப்தில் மீண்டும் கூட்டுப்படுகொலை! ராணுவத்தின் காட்டுமிராண்டித்தம்!

கெய்ரோ: எகிப்தில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக அமைதியாக போராடும் மக்கள் மீது மீண்டும் ராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவம் நடத்திய மிருகத்தனமான துப்பாக்கிச்சூட்டில் 120 பேர் கொல்லப்பட்டதாக இஃவானுல் முஸ்லிமீனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


அநியாயமாக வெளியேற்றப்பட்ட அதிபர் முர்சியை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தக்கோரி வடகிழக்கு கெய்ரோவில் ராபிஅத்துல் அதபிய்யா மஸ்ஜிதுக்கு அருகே திரண்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது சர்வாதிகார வெறிப்பிடித்த ராணுவமும், அவர்களது ஆதரவாளர்களும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு உள்ளூர் நேரம் 11.30 மணியளவில் இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 4500க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.அதே வேளையில் 36 உடல்கள் எண்ணப்பட்டதாகவும், மீதமுள்ள 21 உடல்கள் அருகில் உள்ள மார்ச்சுவரியில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

சில வாரங்களுக்கு இடையே இரண்டாவது தடவையாக ராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தை காட்டியுள்ளது.ஜூலை 8-ஆம் தேதி நடத்திய கொடூர துப்பாக்கிச்சூட்டில் முர்ஸியின் ஆதரவாளர்கள் 62 பேர் கொல்லப்பட்டிருந்தனர். முர்ஸி ஆதரவாளர்களான அமைதியான முறையில் போராடும் மக்களை எதிர்கொள்ள, ராணுவ ஆதரவாளர்களுக்கு சர்வாதிகார வெறிப்பிடித்த ராணுவ தலைமை தளபதி அப்துல் ஃபத்தாஹ் அல் ஸீஸீ அழைப்பு விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து ராணுவத்தை ஆதரிக்கும் ஏராளமானோர் வீதிகளில் இறங்கினர்.அலெக்ஸாண்டிரியாவில் இரு பிரிவினர் இடையே நடந்தமோதலில் ஏழுபேர் கொல்லப்பட்டனர்.மக்களிடையே மோதலை ஏவிவிட்டு கொலைச்செய்ய ராணுவம் முயற்சிப்பதாகவும், அமைதி காக்கவும் இஃவானுல் முஸ்லிமீன் அழைப்பு விடுத்திருந்தது.

கூட்டுப்படுகொலையைக் குறித்து உடனடி விசாரணை நடத்தவேண்டும் என்று ஸலஃபி கட்சியான அந்நூர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.கடைசி நபரும் மரணித்து வீழும் வரை போராட்டத்தில் களத்தில் தொடருவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் காதரின் அஷ்டன் இச்சம்பவத்தை கண்டித்துள்ளார். இதனிடையே 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள அதிபர் முர்சியை முபாரக்கை சிறை வைத்துள்ள தோரா சிறைக்கு மாற்றப்போவதாக சட்டவிரோத அரசின் உள்துறைஅமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக