திங்கள், ஜூலை 15, 2013

போலி என்கவுண்டர்களின் சூத்திரதாரி ஐ.பியின் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார்!

மும்பை: இதர மாநிலங்களில் இருந்து சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த இளைஞர்களை குஜராத்திற்கு கடத்தி வந்து போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொலைச் செய்யும் சதித்திட்டத்தில் முக்கிய சூத்திரதாரி ஐ.பியின் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் என்று அவுட்லுக் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 2002-05 வரை குஜராத்தில் ஐ.பி ஸ்டேஷன் தலைவராக இருந்த ராஜேந்தர் குமார், மோடியின் நெருக்கமான நண்பர் என்று அவுட்லுக் ஆதாரத்துடன் கூறுகிறது.

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜேந்தர் குமார், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான டி.ஐ.ஜி வன்ஸாராவின் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து செல்பவராக இருந்தார். உயர்ந்த ரேங்கில் உள்ள ஒரு ஐ.பி.எஸ் ஆபிஸரை பொறுத்தவரை இந்த சந்திப்பு ஒரு அசாதாரண நட்பாகும். போலி என்கவுண்டரில் ஸ்பெஷலிஸ்டான வன்ஸாரா தற்போது சிறையில் உள்ளார்.
மும்பை, ஹைதராபாத் நகரங்களில் குஜராத் போலீசும், ராஜேந்தர் குமாரும் இரைகளை தேடினர். மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் மற்றும் மத்திய போலீசின் ரகசிய உதவி இவர்களுக்கு கிடைத்ததாக கருதப்படுகிறது. பல நாட்கள் கஸ்டடியில் வைத்து சித்திரவதைச் செய்த பிறகு கொலைச் செய்வது இவர்களது வழக்கமாகும்.தான் குஜராத் இண்டலிஜன்ஸ் போலீஸில் துணை டி.ஜி.பியாக பணியாற்றிய காலங்களில் ஒருபோதும் ஐ.பி எவ்வித ரகசிய தகவலையும் அளித்ததில்லை என்றுஆர்.பி.ஸ்ரீகுமார் ஐ.பி.எஸ் கூறுகிறார். ஸ்ரீகுமாரை பதவியில் இருந்து நீக்கிய பிறகே குஜராத்தில் போலி என்கவுண்டர்கள் அரங்கேறத்துவங்கின.குற்றவாளி என்று போலீஸ் கூறும் சமீர் படானை கொலைச்செய்ததன் மூலம் குஜராத் போலீஸின் கொடூரமான போலி என்கவுண்டர் வேட்டை துவங்கியது.
ஸ்ரீகுமாருக்கு எதிராக 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போது அவருக்கு எதிராக சாட்சி கூற நீதிமன்றத்திற்கு ராஜேந்தர்குமார் வந்திருந்தார். 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த முஸ்லிம் இனப்படுகொலையில் ராஜேந்தர்குமாரின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்தக்கோரி பணியில் இருந்து விலகிய ஐ.பி.எஸ் அதிகாரி இனப்படுகொலைகளை குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் (எஸ்.ஐ.டி) புகார் அளித்தபோதும், எஸ்.ஐ.டி அதனை புறக்கணித்தது. 
ராஜேந்தர் குமார் தான் கோத்ரா ரெயில் பெட்டி தீ எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ என்று தகவல் அளித்தவர். ஆனால், இதனை ஆவணம் மூலம் அவர் அறிக்கை தரவில்லை.
பா.ஜ.கவின் தீவிர ஆதரவாளரான ராஜேந்தர் குமாருக்கு, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ அரசு அவரது சேவை மற்றும் தகுதியை பரிசீலிக்காமலேயே பதவி உயர்வை அளித்தது.

செய்தி:தேஜஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக