வெள்ளி, ஜூலை 12, 2013

இஷ்ரத் கொலை வழக்கு: பாஜக தலைவர்களுக்கு நெருக்கமான ஐபி அதிகாரி!-திக்விஜய்சிங்

கடந்த 2004-ஆம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் குஜராத்தில்  காவல்துறை அதிகாரிகளால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். 'தீவிரவாதி' என்ற சந்தேகத்தின் பேரில் சுட்டதாக காவல்துறை கூறியது. பின்னர் இஷ்ரத் அப்பாவிப் பெண் என்று மத்திய புலனாய்வுத் துறையால் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் முன்னதாக, இஷ்ரத்தை  'தீவிரவாதி' யாகக் காட்டியதிலும், வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்திக் கொல்ல திட்டமளித்ததாகவும் ராஜேந்திரகுமார் எனப்படும் இன்டெலிஜன்ஸ் பீரோ  (ஐ.பி) இந்திய உளவு அமைப்பின் அதிகாரி  குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் அண்மையில் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் "இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சிக்கிய ராஜேந்திரகுமார், பாஜகவின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கெளசல் வடகிழக்கு மாநிலம் ஒன்றில் (மிசோரம்) ஆளுநராக இருந்த போது அவருடன் நெருக்கமானவராக இருந்தார் என்பது உண்மை இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அஹமதாபாத்தில் அத்வானி அமைச்சராக இருந்தபோது தான் ராஜேந்திரகுமார் ஐ.பியில் நியமிக்கப்பட்டது உண்மை இல்லையா? அப்போது அகமதாபாத் காவல்துறை அதிகாரியாக இருந்த ஜி.எல்.சிங்கால் மத்திய புலனாய்வுத் துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் குஜராத் காவல்துறை போலி என்கவுன்ட்டர் நடத்த ராஜேந்திர குமார் உதவினார் என்பது உண்மை இல்லையா? என்றும் அடுக்கடுக்காக திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
'நரேந்திர மோடியை நாயகன் ஆக்கவும், முஸ்லிம்கள் மீது தீவிரவாத பிம்பம் ஏற்படுத்துவதும் தான் இந்த அப்பாவிகள் மீதான கொலைக்குக் காரணங்கள்' என்றும் திக் விஜய் சிங் அப்பேட்டியில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக