வியாழன், ஜூலை 25, 2013

புத்த கயாவில் வெடித்த குண்டுகள் குஜராத்தில் தயாரிக்கப்பட்டவை! - என்.ஐ.ஏ உறுதி!

புத்தகயா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட டைமர்கள் குவஹாத்தியில் உள்ள கடையில் இருந்தும், வெடிப்பொருள் குஜராத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டுபிடித்துள்ளது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட க்ளாக்குகளில் பொருத்தப்பட்டிருந்த வெடிக்குண்டுகள் குஜராத்தின் ராஜ்கோட்டில் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் குண்டுகளை கட்டி வைத்திருந்த சிலிண்டர்கள் பீகாரில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
மங்கோலிய உருவம் கொண்ட நபருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ கூறியுள்ளது.
இதனால் இவ்வழக்கில் காவி பயங்கரவாதிகள் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதனை தொடர்ந்து மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது இதனால் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக