செவ்வாய், ஜூலை 30, 2013

ஃபேஸ்புக், ட்விட்டரில் இஸ்லாத்தை அவமதிக்கும் புகைப்படம், கருத்துகளை பரப்புவது ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய திட்டம்?

புதுடெல்லி: சமூக இணைய தளங்கள் உள்ளிட்ட ஊடக நெட்வர்க்கில் ஊருடுவி சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக பாதுகாப்பு ஏஜன்சிகளிடம் அழுத்தம் கொடுக்கவும், மக்களவை தேர்தலில் ஹிந்துத்துவாவிற்கு ஆதரவான சூழலை உருவாக்கவும் ஆர்.எஸ்.எஸ் பன்முக திட்டங்களை தயாரித்துள்ளதாக அவ்வமைப்பின் வருடாந்திர அறிக்கை கூறுகிறது.

மார்ச் 15,16,17 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த அகில பாரதீய பிரதிநிதி சபாவில் சர்க்காரியவாஹ் சுரேஷ் பய்யா ஜோஷி தாக்கல் செய்த அறிக்கையில் (வருடாந்திர பிரதிவேதன்) அண்மைக்காலங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்வும், அதனை முறியடிக்க பல்வேறு துறைகளில் நடக்கும் திட்டங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.
முக்கிய துறைகள் குறித்த மீளாய்வில் உடல் பயிற்சி பிரிவான சாரீரிக் விபாக், தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாகாக்களில் நடத்திய பிரஹார் யோஜனா (தாக்குதல் பயிற்சி) குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டில் தற்போதுள்ள 42, 981 ஷாகாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15, 964 ஷாகாக்களில் பிரஹார் யோஜனா (தாக்குதல் பயிற்சி) நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் 1,66,959 பேர் பயிற்சிப்பெற்றுள்ளனர் என்பதை ஆவணம் தெரிவிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்த பயிற்சி பிரிவான பவுத்தீக் விபாஹ், நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 78 பேருக்கு போபாலில் வைத்து சிறப்பு பயிற்சியை நடத்தியுள்ளது. இதில் 40 கார்ய கர்த்தாக்கள் கலந்துக் கொண்டனர். உறுப்பினர்களிடம் கொள்கையை குறித்த தீவிரத்தை உருவாக்கவே பவுத்தீக் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஊடக பிரிவான பிரச்சார் விபாஹ் நடைமுறைப்படுத்தும் பயிற்சியில்தான் ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கான திட்டங்கள் விவரிக்கப்படுகின்றன.
பிரச்சார் விபாஹ் 25 மாநிலங்களில் நடத்திய பணி முகாமில், 2,248 பேர் பங்கேற்றுள்ளனர். ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு சாதகமாக பதில் அளிக்கவும், தலையிடவும் இப்பிரிவு தீவிரமாக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு தொலைக்காட்சி சானல் விவாதங்களில் கலந்துகொண்டு உரையாடும் பயிற்சி அளிக்கப்பட்டது. பெண்கள் உள்பட கிட்டத்தட்ட 100 பேர் நாட்டி பல்வேறு 50 சானல்களில் விவாதங்களில் பங்கேற்கின்றனர்.
நாரத ஜெயந்தி விழாவில் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு பயிற்சியில் சானல்கள் மற்றும் பத்திரிகைகளில் பணியாற்றும் 182 பேர் 82 இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். பத்திரிகையாளர்களுக்கான பயிற்சியை ஏற்பாடுச் செய்வது ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னணி அமைப்பான விஸ்வசம்வாத மையமாகும். இவர்கள் வெளியிட்ட 31 ஜாக்ரன் பத்திரிகை 1.7 லட்சம் கிராமங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது. சமூக இணையதளங்கள் வழியாக புதிய தலைமுறையினை கவர சிறப்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கேரளா உள்பட சமூக இணையதளங்கள் வழியாக ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரம் அதிகரித்து பல இடங்களில் வன்முறைகள் ஏற்பட்டன. ஃபேஸ்புக், ட்விட்டரில் இஸ்லாம் மற்றும் இஸ்லாத்தின் இறுதித்தூதர் குறித்து அவமதிக்கும் புகைப்படங்களும், கருத்துக்களும் அதிகரித்து வருவது ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய திட்டங்கள் மூலமே என்று கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக