திங்கள், ஜூலை 29, 2013

காரைக்கால்: பா.ஜ.க வன்முறையால் பாதிக்கப்பட்டோரை பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் நேரில் சந்திப்பு!

காரைக்கால்: பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 22.07.2013 அன்று தமிழகம் முழுவது பா.ஜ.க. பந்த் அறிவித்திருந்தது. இந்த பந்த் தோல்வியடைந்துள்ளது என்றாலும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் பா.ஜ.கவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதுபோன்று காரைகாலில் புதுவை பா.ஜ.க. செயலாளர் அருள் முருகனின் தலைமையில் கும்பல் ஒன்று ஒவ்வொரு கடையையும் அடைக்க சொல்லி மிரட்டி வன்முறையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மாதா கோவில் வீதியில் உள்ள மேக்ஸ் உமன் கடையை அடைக்க சொல்லி மிரட்டியதோடு அங்கு பணியிலிருந்த ஹாஜா என்பவரை கொலை செய்யும் விதத்தில் கத்தியால் கழுத்தில் குத்தவும் வந்தனர். அதை தடுத்த ஹாஜாவின் கையில் கத்திக்குத்து ஏற்பட்டது.
இதனை தெரிந்து அங்கு கூடிய முஸ்லிம்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடசாமி முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்துப் பேசினார். குறிப்பாக “உங்களால் அதிகபட்சமாக வெடிகுண்டுதானே வைக்க முடியும். வையுங்கள், நான் நடவடிக்கை எடுத்துக் கொள்கிறேன்” என்று பல சமூக மக்கள் முன்னிலையில் முஸ்லிம்களின் மனம் புண்படும்படியாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் காரைக்காலில் பா,ஜ .க நடந்திய பந்தில் பாதிக்கப்பட்ட ஹாஜா அவர்களை பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹமது ரசீன் அவர்கள் 25.07.2013 அன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து நடந்த சம்பவத்தை நேரில் கேட்டு அறிந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக