நெல்லை: இரு நாட்களுக்கு முன் மேலப்பாளையத்தில் கைது செய்யப்பட்ட ஆறு வாலிபர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பமும் உறவினர்களும் அவர்கள் பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
குற்றப்புலனாய்வு (C B C I D ) மற்றும் சிறப்புப் புலனாய்வு ( S I T ) பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்த ஆறு பேரும் சேலம் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை வழக்கு காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும் அக்கொலைகள் தொடர்பாக இவர்களிடம் எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை என்று அவர்களைச் சந்தித்து விட்டு வந்த உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலப்ப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயீல் என்பவரைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் துன்புறுத்தியுள்ளனர்; கைது செய்யப்பட்டுள்ள் அறுவரில் பிஸ்மி , ஷம்ஸு, நூருல் அமீன் ஆகிய மூன்று இளம் வயதுச் சிறுவர்களும் உள்ளனர்; வெடிமருந்துகள் வைத்திருந்ததாக அவர்கள் மீது காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. கண்டுபிடித்ததாகக் காவல்துறையால் கூறப்படும் வெடி மருந்துகளுக்கும் அவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். பா ஜ க மற்றும் இந்து முன்னணியின் திருப்திக்காகப் பொய்வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள இவர்களை விடுவிக்க, சட்ட ரீதியான முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக