நரேந்திர மோடி ஹைதராபாத்தில் உள்ள லால்பகதூர் அரங்கில் அடுத்த மாதம் 11–ந் தேதி பேச இருந்த கூட்டத்திற்கு நுழைவுக் கட்டணமாக ரூ.5 வசூலிக்க பாஜக திட்டமிட்டிருந்த முடிவை அண்மையில் திரும்பப் பெற்றுள்ளது.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி ‘யுவ சம்மேளன்‘ என்ற கூட்டத்தை நடத்த ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு அங்கு மோடி உரையைக் கேட்க நுழைவுக் கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது
இந்த அறிவிப்புக்குக் காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு மற்றும் கேலி, கிண்டல் செய்ததையடுத்து ஆந்திர பாரதிய ஜனதா தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. புதிய முடிவின் படி, கூட்டத்தில் இலவசமாக பங்கேற்கலாம் என்றும், நுழைவு கட்டணம் செலுத்துவது கட்டாயம் அல்ல என்றும் மாநில பாரதிய ஜனதா தலைவர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக