வியாழன், ஜூலை 04, 2013

இலங்கை: இஸ்லாமிய பாடசாலை மைதானத்தில் புத்தர் சிலை!

கொழும்பு: இலங்கை வாழைசேனை  சாதுலியா வித்தியாலயா என்கிற முஸ்லிம்  பள்ளி மைதானத்தில் திடீரென தோன்றிய புத்தர் சிலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு  இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் நடுவில் மேசையொன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டு, நிழலுக்கு குடையொன்றும் நடப்பட்டுள்ளதை மறுநாள் காலையில் தாங்கள் கண்டதாகக் கூறும் பள்ளி நிர்வாகம் வாழைச்சேனை காவல் நிலையத்தில்  இது தொடர்பாக புகார் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த சிலையை வைத்த வாழைச்சேனை புத்த ஜயந்தி, "சிலையை வைப்பதற்கு நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது" என்று கூறியுள்ளார். மேலும் இந்த மைதானம் புத்தர் சிலைக்காக ஒதுக்கப் பட்டதாகவும்   இது முஸ்லிம்களுக்கு எதிரான செயலாக  எவரும் கருதக் கூடாது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 இந்த மைதானம் உரிமை தொடர்பாக  விகாராதிபதிக்கும் பள்ளி நிர்வாகத்திற்குமிடையில் ஏற்கனவே முரண்பாடு இருந்துள்ளது. எனினும் இந்த மைதானம் பள்ளி நிர்வாகத்திற்கே சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இங்கு புத்தர் சிலை வைக்கப் பட்டுள்ளது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக