ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள லால்பகதூர் மைதானத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி பா.ஜ.க. பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மோடியின் பேச்சை கேட்பதற்காக நுழைவுக் கட்டணமாக 5 ரூபாயை பா.ஜ.க. வசூல் செய்து வருகிறது.
பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், "சாமியார்களை பார்க்க ஒரு ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
நல்ல திரைப்படங்கள் இருந்தாலும், மோசமான திரைப்படங்கள் இருந்தாலும் தியேட்டர்களில் 100 ரூபாய்க்கு மேலும் வசூல் செய்யப்படுகிறது. சில தியேட்டர்கள் ஆயிரம் ரூபாய் வசூல் செய்கிறது. மோடியின் உண்மையான மதிப்பு தற்போது வெளிப்பட்டுள்ளது. இதுதான் ஜனநாயகத்தை காப்பாற்றும் நடைமுறையா என்ற கேள்வி எழுந்துள்ளது" என்றார்.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "மோடியை புகழ் பெற்ற கதாநாயகன் போல் காட்ட விரும்புகின்றனர். ராவணன் போல் 10 முகங்கள் மோடியின் முகமாக வெளியிடப்படுகிறது" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக