வாஜ்பாய் கேட்டுக்கொண்டால், பாரத ரத்னா விருதை திருப்பித் தர தயாராக இருப்பதாக பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்யா சென் தெரிவித்துள்ளார். தமது பேச்சுரிமையை பறிக்க முடியாதும் என்றும், மோடியை தான் விமர்சித்ததாகவும், பாரதிய ஜனதாவை விமர்சிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நரேந்திர மோடி மதச்சார்பற்ற தலைவர் அல்ல என்பதால், அவரை பிரதமராக பார்க்க விரும்பவில்லை என அமர்த்யா சென் கூறியிருந்தார்.
இதனை கடுமையாக விமர்சித்த பாரதிய ஜனதா எம்.பி., சந்தன் மித்ரா, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தால், அமர்த்தியா சென்னுக்கு அளிக்கப்பட்ட பாரத் ரத்னா விருதை திருப்ப வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய பாரதிய ஜனதா ஆட்சியின்போது அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடமிருந்து அமர்த்யா சென் பாரத் ரத்னா விருது பெற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக