திங்கள், ஜூலை 15, 2013

எகிப்து: முர்ஸி மீது குற்ற விசாரணை! இடைக்கால அரசு திட்டம்!

எகிப்தில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முர்ஸியை நீக்கிய ராணுவம் நிலையில் முர்ஸி மீது குற்ற விசாரணை நடத்துவதற்கு அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. ஜனநாயக முறையில் தேர்வான அதிபர் முர்ஸிக்கு எதிரான எதிர்கட்சிகளின் போராட்டத்தை தொடர்ந்து அவர் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முர்ஸி மீது உளவு வேலையில் ஈடுபட்டது, பொருளாதாரத்தை சீர்குலைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பதால் அவர் மீது குற்ற விசாரணை துவங்க இருப்பதாக அந்த நாட்டின் மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எகிப்து ராணுவம் பாலஸ்தீன் மற்றும் எகிப்துக்கு இடையேயான சுரங்கப் பாதைகளை இடித்து தள்ளியுள்ளது.
Info: Newindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக