எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர் ஏ.சயீது இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: பீகார் மாநிலம் காயாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற புத்த கோவிலில் ஜுலை 7 ஆம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை எஸ்.டி.பி.ஐ வன்மையாக கண்டிக்கிறது. ஆனால் இந்த சம்பவத்தை சில ஊடகங்கள் மியான்மரில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலையோடு ஒப்பிட்டு வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது.
குண்டு வெடிப்பில் காயமடைந்த புத்த பிக்குகளுக்கு அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பயங்கரவாதச் செயலுக்கு காரணமாக குற்றவாளிகளை உரிய ஆதாரங்களுடன் காவல்துறை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதனை விடுத்து விசாரணையை தொடங்கும் முன்பே முஸ்லீம்கள் மீதோ, அல்லது வேறு ஏதும் சமூகத்தினர் மீதோ, வதந்திகளை ஊடகங்கள் மூலம் பரப்புவதை காவல்துறையினர் நிறுத்த வேண்டும். எனவே இநதியர்கள் உட்பட அனைவரும் இந்த விவகாரத்தில் கவனமாக செயல்படுவதோடு, மியான்மர் முஸ்லீம்களுடனோ, அல்லது முஸ்லீம்களுடனோ தொடர்ப்பு படுத்தி பார்க்க வேண்டாம்.
இந்த குண்டுவெடிப்பின் மூலம் மதநல்லிணக்கத்தை கெடுத்து, ஆதாயம் அடைபவர்கள் யார் என்பதை உணர்ந்து, மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உளவு அமைப்புகள் கடந்த காலங்களில் செய்த தவறுகளின் காரணமாக ஏராளமான அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை நினைவு கூர்ந்து தற்போதைய சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக