செவ்வாய், ஜூலை 16, 2013

பிரான்சில் அணு உலைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

பிரான்சில் அணு உலைக்கு எதிரான பசுமை அமைதி இயக்க ஆர்வலர்கள் திடீரென அணு மின் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்சின் துரோம் பகுதியில் திரைகாஸ்டின் என்ற அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை அணுசக்திக்கு எதிரான பசுமை அமைதி இயக்கத்தினர் சிலர், திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டம் நடத்தியவர்களில் 21 பேர் உள்ளே நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக விரைந்து வந்த பொலிசார், அவர்களை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக