புதன், ஜூலை 17, 2013

SDPI கட்சியின் தன்னலமற்ற சேவையின் எதிரொலி! ஒரே நாளில் 170 துப்புறவு பணியாளர்களை களமிறக்கிய மாநகராட்சி!

நெல்லை: கடந்த 07.07.2013 அன்று மாநகராட்சியின் 37 வது வார்டுக்கு உட்பட்ட காஜா நாயகம் தெருவின் சுகாதார சீர்கேட்டை சரி செய்யும் நோக்கில் SDPI கட்சியினர் "நமக்கு நாமே" என்ற தன்னலமற்ற சமூக சேவையை கையில் எடுத்து காஜா நாயகம் தெரு மற்றும் மேத்தமார்பாளையம் 4 வது தெருவின் தேங்கி கிடந்த கழிவுநீர் ஓடைகளை சிறிதும் தயக்கமின்றி தாங்களின் கைகளாலே சுத்தம் செய்து பல மாதங்களாக தேங்கிக் கிடந்த மலக் கழிவுகளை அப்புறப்படுத்தின் கழிவு நீர் ஓடைகளை சரிசெய்து கழிவுநீரை (சாக்கடை) ஓடச்செய்தனர். 


இந்நிகழ்வில் SDPI கட்சியின் சாதாரண தொண்டன் முதல் மாவட்ட அளவிலான தலைவர்கள் வரை களமிறங்கி பணியாற்றிய இச்சம்பவம் பொதுமக்களிடத்தில் பெரிதும் வரவேற்பை பெற்றது. மேலும் SDPI கட்சியினர் இந்நிகழ்வை ஒவ்வொரு வாரமும் தெருத் தெருவாக தொடரப்போவதாக பத்திரிக்கையாளர்களை கூட்டி அறிவைத்தனர். இந்த அதிரடி அறிவிப்பு உறங்கிக்கொண்டிருந்த மாநகராட்சியை தட்டியெழுப்பியதின் விளைவு இன்று (16.07.2013) 37வது வார்டுக்கு உட்பட்ட சுமார் 17 திறந்தவெளி கழிவுநீர் ஓடைகளை சுமார் 170 துப்புறவு பணியாளர்கள் மற்றும் 4 மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் பல மணி நேரம் போராடி ஆண்டு கணக்கில் தூர்வாரப்படாமல் கிடந்த வார்டின் 17 பகுதிகளையும் தூர்வாரினர்.....
இந்த பணியானது மற்ற வார்டுகளுக்கும் தொடரும் என்று தெரிகின்றது மாநகராட்சியை தட்டி எழுப்பிய SDPI கட்சியினரை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மனதார பாராட்டுகின்றனர்.
07.07.2013 அன்று SDPI கட்சியினர் கழிவுநீர் ஓடைகளை சரிசெய்யும் காட்சி


16.07.2013 இன்று மாநகராட்சியினரால் கழிவுநீர் ஓடைகள் சரி செய்யப்பட்ட காட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக