செவ்வாய், ஜூலை 30, 2013

இஷ்ரத் ஜஹான் வழக்கு: நீண்டநாள் தலைமறைவு குற்றவாளி திடீரென மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி: போலி என்கவுண்டர் முறையில் அப்பாவி மாணவி இஷ்ரத் ஜஹானை கொலை செய்த குற்றவாளி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு அப்பாவிகள் குஜராத்தில் காவல்துறை அதிகாரிகளால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்த விசாரனையில் இந்த 4 பேரும் அப்பாவிகள் என்றும் குஜராத் காவல்துறை நடத்தியது போலி என்கவுன்ட்டர் என்றும் புகார்கள் எழுந்தன. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இது போலி என்கவுண்டர் தான் என்று உறுதி செய்தது.
இதனிடையே இந்த வழக்கில் நீண்ட காலம் தலைமறைவாக இருந்த காவல்துறை அதிகாரி பிபி பாண்டே தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். இவர் நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி என காரணங்காட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இஷ்ரத் ஜஹான் படுகொலையை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான குஜராத் IPS அதிகாரி G L சிங்கால், ஏற்கனவே கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக