திங்கள், ஜூலை 15, 2013

நாடாளுமன்றத்தாக்குதலை நடத்தியது பாஜக அரசு தான்!-முஸ்லிம்களை கருவறுக்க கையாண்ட சதி அம்பலம்!


புதுடெல்லி: பாராளுமன்றத் தாக்குதலையும், மும்பை தாக்குதலையும் திட்டமிட்டு நடத்தியது மத்திய அரசு என்றும், தீவிரவாத தடுப்புச் சட்டங்களை உருவாக்கவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டு பிரபலமான ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஷ்ரத் வழக்கில் மத்திய அரசுக்காக பிரமாணப்பத்திரம் தயாரித்த முன்னாள் அண்டர் செகரட்டரி ஆர்.வி.எஸ்.மணி, சதீஷ் வர்மா இவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகு பா.ஜ.க அரசு பொடா சட்டத்தை கொண்டுவந்ததும், மும்பை தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு UAPA சட்டத்தைக் கொண்டுவந்ததையும் இதற்கு ஆதாரமாக சதீஷ் வர்மா சுட்டிக்காட்டினார் என்று ஆர்.வி.எஸ்.மணி தெரிவித்துள்ளார். இஷ்ரத் வழக்கை சி.பி.ஐக்கு அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்துறை அமைச்சகம் தயாரித்த இரண்டு பிரமாணப்பத்திரங்கள் தொடர்பாக சதீஷ் வர்மா, ஆர்.வி.எஸ். மணியிடம் விசாரணை நடத்தினார். 

2009-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த முதல் பிரமாணப்பத்திரத்தில் சி.பி.ஐ விசாரணையை எதிர்த்தது. அதற்கு காரணமாக, இஷ்ரத் உள்ளிட்டோர் லஷ்கர் - இ - தய்யிபா போராளிகள் என்று ஐ.பி கூறிய தகவலை சுட்டிக்காட்டியது. இதே ஐ.பி தகவலை காரணம் காட்டித்தான் குஜராத் அரசு போலி என்கவுண்டரை நியாயப்படுத்தியது.

ஆனால், 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்த 2-வது பிரமாணப்பத்திரத்தில் ஐ.பி தகவலை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி சி.பி.ஐ விசாரணையை ஆதரித்திருந்தது. சி.பி.ஐ விசாரணையை எதிர்த்த முதல் பிரமாணப்பத்திரத்தை தயாரித்தது, சி.பி.ஐ தாக்கல் செய்யவிருக்கும் 2-வது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்படவிருக்கும் ஐ.பி அதிகாரி ராஜேந்தர் குமாரா? என்று சதீஷ் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார். உள்துறை அமைச்சகத்தில் செயலாளர் பதவி கிடைப்பதற்கு ஐ.பி ரிப்போட் தேவை என்பதால் அதிகாரிகள் ஐ.பியின் பக்கவாத்தியமாக செயல்படுவதாக சதீஷ் வர்மா குற்றம் சாட்டினார் என்றும் ஆர்.வி.எஸ்.மணி தெரிவித்துள்ளார். 

இதுத்தொடர்பாக நகர வளர்ச்சித்துறை துணை செயலாளரிடம் மணி புகார் அளித்துள்ளாராம். ஆனால், இக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க சதீஷ் வர்மா மறுத்துவிட்டார். கூடுதல் விபரங்களுக்கு சி.பி.ஐ தொடர்புக் கொள்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஷ்ரத் வழக்கு சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில்(எஸ்.ஐ.டி) உறுப்பினராக இருந்த சதீஷ் வர்மா, தனது சக ஊழியரே ஆதாரங்களில் ஏற்படுத்திய குளறுபடிகள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் மூலம் கவனத்தை ஈர்த்தார். என்கவுண்டர் போலி என்பதை 2011-ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வர்மா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முஸ்லிம் போராளிகளை வர்மா ஆதரிப்பதாக அரசும், இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களும் அவர் மீது பாய்ந்தனர். 

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இஷ்ரத் மற்றும் ஜாவேத் (இவரது முந்தைய பெயர் பிராணேஷ் குமார்) ஆகியோரை வஸாத் என்ற இடத்தில் இருந்து குஜராத் க்ரைம் ப்ராஞ்ச் கடத்திச் சென்று அஹ்மதாபாத்திற்கு கொண்டுவந்ததாக கூறும் சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவுச் செய்ய தயாரானார் வர்மா. போலி என்கவுண்டர் தொடர்பாக உண்மையான ஃபோட்டோக்கள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கை கைப்பற்ற அஹ்மதாபாத்தில் உள்ள ஃபாரன்சிக் சயன்ஸ் லேபில் நடத்திய ரெய்டும் வர்மாவை இன்னமும் பிரபலப்படுத்தியது. ஏ.கே 56 துப்பாக்கிகளுடன் ஒன்பது எம்.எம் துப்பாக்கிகளை பயன்பத்தி இஷ்ரத் உள்ளிட்டோரை வெகு அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டதை தெளிவுப்படுத்தும் ஃபோட்டோக்களாக இவை அமைந்தன.

1986 பாட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான வர்மா, அஹ்மதாபாத் ட்ராஃபிக் துணை கமிஷனராக பணியாற்றிய வேளையில்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் குஜராத் போலீஸால் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில் விசாரணைக்காக நியமிக்கப்பட்டார். ஆனால், 16 மாதங்களுக்குள் ஜுனாகட்டில் உள்ள போலீஸ் ட்ரெயினிங் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இவ்வேளையில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக வர்மாவை, உயர்நீதிமன்றம் நியமித்தது. காலாவதி முடிந்த பிறகும் இவரது சிறந்த சேவையின் காரணமாக, சி.பி.ஐ இரண்டு முறை பணிக்காலத்தை நீட்டித்து வாங்கியது. கடந்த ஜூன் 24-ஆம் தேதி சி.பி.ஐக்கு உதவு பணி வர்மாவுக்கு முடிவடைந்தது. பின்னர் மாநில போலீசுக்கு திரும்பிய மீண்டும் போலீஸ் ட்ரெயினிங் கல்லூரியில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

செய்தி:தேஜஸ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக