வியாழன், ஜூலை 25, 2013

மோடியை புறக்கணிக்கும் ம.பி. முதல்வர் சவுஹான்! : உச்சகட்ட 'கோஷ்டி'ப்பூசல்!

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், அம்மாநில முதல்வர் சவுஹான், "ஜன் ஆசீர்வாத் யாத்ரா" என்ற பெயரில் மக்களை சந்தித்து ஆதரவு திராட்டி வருகிறார்.

சவுஹான், அத்வானியை "சுப்ரீம் லீடர்" என்றும், பதிலுக்கு குஜராத்தை விட மத்தியப்பிரதேசத்தில், சவுஹான் சிறப்பான முறையில் செயல்படுகிறார் என்று அத்வானியும் பேசி, மோடிக்கு எதிரான கோஷ்டி அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டினர்.

தற்போது முதல்வர் சவுஹான், மாநிலம் முழுவதும் செய்யும் சுற்றுப் பயணங்களின் போஸ்டர்களிலும் கூட மோடியின் படத்தைப் புறக்கணித்து வருகிறார், அவர்.

போஸ்டரில் உள்ள படங்கள் :-

முதலமைச்சர் சவுஹானின் முழு உருவப்படம் போட்டு, மேற்புறத்தில் இடமிருந்து வலமாக: 

1. வாஜ்பாய் 

2. அத்வானி 

3. ராஜ்நாத் சிங் (பாஜக தேசியத் தலைவர்)

4. சுஷ்மா சுவராஜ் (பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர்)

5. அனந்த குமார் (ம.பி. தேர்தல் பொறுப்பாளர்)

6. நரேந்தர் சிங் தோமர் (மாநிலத் தலைவர்)

ஆகிய 6 படங்களை போட்டுள்ள சவுஹான் மோடியின் படத்தை போடாமல் திட்டமிட்டு புறக்கணித்து வருகிறார்.

இந்தியா முழுவதிலும் ஏற்றுக் கொல்லப்பட்ட தலைவர் மோடி, எனப் பொய்ப் பிரச்சாரம் செய்யும் மீடியாக்கள், பாஜக கட்சிக்குள்ளேயே அவருக்கு இருக்கும் எதிர்ப்புக்களை மூடி மறைக்கின்றன, என்பதே உண்மை.


Info: Maruppu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக