வெள்ளி, ஜூலை 26, 2013

கோவை: மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி தீவிரவாதி கைது!

கோவை: ஓரிரு தினங்களுக்கு முன் கோவையில் மசூதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவாடையூர், கல்லூரை சேர்ந்த மதியழகன் (வயது 24) என்ற இந்து முண்ணனி பயங்கரவாதி என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பாரதிய ஜனதா சார்பில் கடந்த 22- ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.  அப்போது கோவை துடியலூர் என்ஜிஓ காலனியில் உள்ள மசூதி ஒன்றின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர்.

இது தொடர்பாக காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இது தொடர்பாக மதியழகன் என்பவனை  காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப் பட்ட மதியழகன் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவன் என்றும், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய இந்து முன்னணி முன்னாள் தலைவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைதான தீவிரவாதி மதியழகன் கூறுகையில் "பாரதிய ஜனதா கட்சி முக்கிய பிரமுகர்கள் கொலை செய்யப்படுவதை கண்டிக்கவே நானும், இன்னொருவரும் சேர்ந்து பெட்ரோல் குண்டை மசூதியின் மீது வீசினோம் என்றான். எங்களை காவல்துறை தேடி வருவதை அறிந்தோம். ஆகவே, ஊரை வீட்டுத் தப்பிக்கும்போது  காவல் அதிகாரிகளிடம் பிடிபட்டேன் என்றான். இக்குற்றத்தில் உடன் வந்த மற்றோர் தீவிரவாதி பற்றி தகவல் சொல்ல மதியழகன் மறுத்து வருகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக