அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் உள்பட 4 பேர் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குஜராத் போலீசின் பங்கினை நிரூபிக்க சி.பி.ஐக்கு உதவியது முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஜி.எல்.சிங்காலின் வாக்குமூலமாகும்.
இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டதை தொடர்ந்து தனது ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமாச்செய்தார் சிங்கால். இவ்வழக்கில் தொடர்புடைய ஐ.பி.எஸ் அதிகாரிகளான பாண்டே, வன்சாரா ஆகியோரை காப்பாற்ற மோடி அரசு முயற்சித்த வேளையில் சிங்கால் தனது பதவியை ராஜினாமாச் செய்திருந்தார்.கடந்த பெப்ருவரி மாதம் சிங்கால் கைதானார். இவ்வழக்கில் சி.பி.ஐ யின் முதல் கைது நடவடிக்கை இதுவாகும்.
இவ்வழக்கில் குஜராத் முதல்வர் மோடி, அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஐ.பி சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் ஆகியோருக்கு எதிராக முக்கிய ஆதாரங்களை வழங்கியவர் சிங்கால்.மேலும் என்கவுண்டர் போலி என்பதை முதலில் கண்டறிந்த எஸ்.ஐ.டியின் அறிக்கை, 2011-ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னால் அன்றைய உள்துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், சிறப்பு கூட்டத்தை கூட்டி அதிகாரிகளை காப்பாற்ற நடத்திய ரகசிய திட்டங்கள் குறித்த உரையாடலை சிங்கால் ரகசியமாக டேப்பில் பதிவுச் செய்திருந்தார்.இதனை சிங்கால் சி.பி.ஐக்கு அளித்திருந்தார்.சிங்காலை அப்ரூவராக மாற்றவும் சி.பி.ஐ ஆலோசித்தது.
Source : thoothuonline
Source : thoothuonline
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக