வெள்ளி, ஜூலை 26, 2013

இந்தியாவில் ஏழ்மை குறைவதாக அரசு கூறுவது உண்மையா?

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஏழ்மை வேகமாக குறைந்து வருவதாக இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் குறிப்புணர்த்துகின்றன. இந்தியாவில் ஏழைகள் என்று வரையறுக்கப்படும் மக்கள் தற்போது நாட்டின் ஜனத்தொகையில் 22 சதவீதம் பேரே என இந்த விவரங்கள் காட்டுகின்றன. இந்தியாவில் பொருளாதாரம் வளர்ந்து வருவதும், சமூக நலத் திட்டங்களில் அரசாங்கம் பெருந்தொகைகளை செலவு செய்வதும் இந்த மாற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் யதார்த்தத்துக்கு முரணான வறுமைக்கான வரையறையை இந்திய அரசாங்கம் பயன்படுத்துகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். நகர்ப் புறங்களில் வாழும் ஒருவருக்கு மாத வருமானம் ரூ.1000க்கு கீழேயும், கிராமப் புறங்களில் வாழும் ஒருவருக்கு மாத வருமானம் ரூ.816க்கும் கீழேயும் இருந்தால்தான் இந்த வரையறைப்படி ஏழை என்று உள்ளது.
ஆனால் உலக அளவில் ஏழ்மையின் அளவுகோளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு இரண்டு அமெரிக்க டாலருக்கும் குறைவான வருவாய் என்று வைத்துப் பார்க்கும்போது இந்திய ஜனத்தொகையில் கிட்டத்தட்ட எழுபது சதவீதம் பேர் இந்த வருமானத்துக்குள்தான் வாழ்கிறார்கள் என்று உலக வங்கி மதிப்பிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக