செவ்வாய், ஜூலை 16, 2013

தொடர்ந்து சரிந்துவரும் ரூபாய் மதிப்பு : கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டம்!

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. 8 புள்ளி 25 சதவீதமாக இருந்த வட்டிவிகிதத்தை 2 சதவீதம் உயர்த்தி 10 புள்ளி 25 சதவீதமாக அதிகரிக்க திட்டம் வகுத்துள்ளது.

12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு பத்திரங்களை ஜூலை 18 ஆம் தேதி முதல் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.
ஒரு டாலர் 60 ரூபாய் அளவில் இருந்து வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதைத் தடுக்க நடடிவக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக