வெள்ளி, ஜூலை 12, 2013

புத்தகயா குண்டுவெடிப்பு: வகுப்புவாத பிளவை தீவிரப்படுத்துவதற்கான முயற்சி! - சீதாராம்யெச்சூரி!

புதுடெல்லி: இந்தியாவில் அண்மையில் நிகழ்ந்த புத்த கயா குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் வகுப்புவாத பிளவை தீவிரப்படுத்துவதற்கான முயற்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

கட்சி பத்திரிகையான பீப்பிள்ஸ் டெமோக்ரேஸியில் தலையங்கம் எழுதியுள்ள சீத்தாரம் யெச்சூரி கூறியிருப்பது: புத்த கயா கோயிலின் உரிமையை சொந்தம் கொண்டாடி புத்தமதத்தினருக்கும், இந்துக்களுக்கும் இடையே நீண்டகாலமாக தர்க்கம் இருந்து வந்தது.
மாலேகான், அஜ்மீர் ஷெரீஃப், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு ஆகியன சுட்டிக்காட்டுவது ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் பங்களிப்பையாகும். இத்தகைய சம்பவங்களில் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும்.இத்தகைய சம்பவங்களுக்கு யார் பொறுப்பாளி? என்பதல்ல. அனைத்து வகையான தீவிரவாத செயல்பாடுகளும் தேச விரோதம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். 2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலை சந்திக்க பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்ஸுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது ஒரு எச்சரிக்கையாகும். இது வகுப்புவாத பிளவை தீவிரப்படுத்தும். இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பை புனரமைக்கவேண்டும். இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக