வெள்ளி, ஜூலை 12, 2013

கோத்ரா ரெயில் எரிப்புக்கு முன்பே குஜராத் அரசு கலவரத்திற்கு அனுமதி கொடுத்தது!-ஸாகியா ஜாஃப்ரி!

அஹ்மதாபாத்: கோத்ரா ரெயில் தீவைக்கப்பட்ட சம்பவத்திற்கு முன்பே குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்திற்கு குஜராத் உள்துறையும் அரசியல் தலைமையும் அனுமதி அளித்துள்ளது என்றும் இதற்கு சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையிலேயே ஆதாரம் இருப்பதாகவும் ஸாகியா ஜாஃப்ரியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

நீதிமன்றத்தின் முன்னால் உள்ள வழக்கு கோத்ராவிற்கு முன்பு கலவரத்திற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதா? என்பது தொடர்பானதாகும். இதனை நிரூபிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவின்(எஸ்.ஐ.டி) கையில் உள்ள இண்டலிஜன்ஸ் அறிக்கைகளே போதுமானது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது: கோத்ரா சம்பவத்திற்கு முன்பே ஹிந்துத்துவா சக்திகள் வகுப்புவாத ரகளைக்கு தயாரிப்புடன் இருந்தனர்.வி.ஹெச்.பி, பஜ்ரங்தளம், பா.ஜ.க ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் அயோத்திக்கு கோயிலை கட்டுவதற்கான யாத்திரைக்கு புறப்படுவதாக கூறும் இண்டலிஜன்ஸ் ரிப்போர்ட்டுகளை அரசு புறக்கணித்தது. கோயில்களை மையமாக கொண்டு தீவிரமாக வகுப்புவாத உணர்வை தூண்டும் பிரச்சாரங்கள் நடப்பதாக குஜராத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் இண்டலிஜன்ஸ் ரிப்போர்ட் அனுப்பப்பட்டது. 
இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசியல் தலைமையும், உள்துறையும் இதனை புறக்கணித்தது சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பதற்கான ஆதாரம் என்று ஸாகியா ஜாஃப்ரியின் வழக்கறிஞரான மிஹிர் தேசாய் கூறினார்.
சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் செகரட்டரி டீஸ்டா ஸெடல்வாட், அவ்வமைப்பின் வழக்கறிஞர் ஆகியோர் மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடந்த அனைத்து தினங்களிலும் ஆஜராகியிருந்தனர். 
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின்போது நிகழ்த்தபப்ட்ட குல்பர்க் சொஸைட்டி கூட்டுப்படுகொலையில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி ஆவார்.

செய்தி:தேஜஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக