லக்னோ: இந்துத்துவா கொள்கையில் தீவிர பிடிப்பு கொண்ட ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி பஜ்ரங்தள் அமைப்புகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயவாதி குரல் எழுப்பி உள்ளார்.
தலைநகர் லக்னோவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி பகுஜன் சமாஜ் கட்சி சாதிகள் மற்றும் சமூகங்கள் இடையே சகோதரத்துவத்தை வளர்க்கவே விரும்புகிறது. எனவே சாதி அடிப்படையிலான எங்கள் பேரணியால் நாட்டுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
ஆனால், மத சம்பந்தமான விஸ்வ இந்து பரிசத், ராஷ்ட்ரிய சுவயம் சேவக் மற்றும் பஜ்ரங்தள் போன்ற நாட்டில் தீவிரவாதத்தை தூண்டும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும். அவர்கள் அரசியல் கட்சியாக செயல்படவில்லை.ஆனால், அரசியல் கட்சியாக செயல்படும் பா.ஜ.கவை இந்த அமைப்புகள் கட்டுப்படுத்துகிறார்கள். இந்த சங் பரிவார அமைப்புகள்தான் பாரதீய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதம வேட்பாளர் குறித்து முடிவும் செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக