செவ்வாய், ஜூலை 09, 2013

அப்பாவி ஜமால் மீது போலி என்கவுண்டர் - ரகசிய திட்டம் அம்பலம்!

அஹ்மதாபாத்: அஹ்மதாபாத்தில்  ஜமால் என்ற இளைஞரை 2003ஆம் ஆண்டு போலி என்கவுண்டர் மூலம்  படுகொலைச் செய்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரியின் ரகசிய திடட்டம் அம்பளமாகியுள்ளது. அஹ்மதாபாத்தில் அப்பாவியான ஜமால் என்ற இளைஞரை 2003-ஆம் ஆண்டு போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்த வழக்கில் ஐ.பி.க்குள் கருத்துவேறுபாட்டை உருவாக்கியுள்ளது.  நரேந்திரமோடி மற்றும் பிரவீன் தொகாடியா ஆகியோரை ஜமால் கொலைச் செய்ய திட்டமிட்டுள்ளார் என்பதாக 3 ரகசிய புலனாய்வு அறிக்கைகளை ஐ.பி வெளியிட்டுள்ளது. இதில் கடைசி அறிக்கையை தயாரித்தவர் ராஜேந்தர் குமார் ஆவார். முதல் இரண்டு அறிக்கைகளை ராஜேந்தர் குமாருக்காக யாரோ தயாரித்திருக்கலாம் என்று சி.பி.ஐ சந்தேகிக்கிறது.

 ஜமாலுக்கு எதிராக ராஜேந்தர் குமார் பொய்யான புலனாய்வு தகவல்களை அளித்தார் என்று மஹராஷ்ட்ரா மாநில ஐ.பி அதிகாரியின் வாக்குமூலத்தை சி.பி.ஐ பதிவுச் செய்துள்ளது.
கைது செய்யப் பட்ட ஜமாலிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்காதசூழலில் ஜமால் அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்ச் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால், இவர் தேடப்படும் குற்றவாளி என்று ராஜேந்தர் குமார் அறிக்கை தயாரித்துள்ளார்.. இதன்பிறகு ஜமால் போலி என்கவுண்டர் மூலம் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிபிஐ யின் கோரிக்கையை ஏற்று இரண்டு வாரத்திற்குள் ஐபி இதுகுறித்து பதிலளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட அப்பாவிகளை போலி என்கவுண்டரில் கொலைச் செய்த வழக்கில் குற்றவாளிகளான ஐபிஎஸ் அதிகாரிகள் தாம் இவ்வழக்கிலும் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக