காங்கிரஸ் மதச்சார்பின்மை என்னும் பர்தாவை அணிந்திருப்பதாக விமர்சித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் கடுமையாக பதிலளித்துள்ளார். அம்மணமாகி நிற்கும் மதவாதத்தை விட பர்தா அணிந்த மதச்சார்பின்மை நல்லது தான் என்று அவர் கூறினார்.
அஜய் மக்கான் மேலும் கூறுகையில் "குஜராத் மாநிலம் கல்வியின் இந்தியாவில் 14வது இடத்தில் இருக்கிறது. உள்நாட்டு சுற்றுலாவில் குஜராத் 10வது இடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த சுற்றுலா வருவாயில் குஜராத் மாநிலத்தின் பங்கு 2.5%தான். இப்படி இருக்கும் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியில் முதலில் மோடி அக்கறை செலுத்த வேண்டும்" என்றார்.
மேலும் "பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத் முதல்வராக மோடி இருந்து வருகிறார். ஆனால் அவர் விளையாட்டுத் துறைக்கு ஒன்றுமே செய்யவில்லை. ஒலிம்பிக்கில் இந்திய அணியின் செயல்பாடு மேம்பாடு அடைய வேண்டும் என்கிறார் மோடி. ஆனால் குஜராத்தை சேர்ந்தவர்கள் ஒரு பதக்கத்தையும் வாங்குவதில்லை. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 1000க்கும் அதிகமான தங்கப் பதக்கங்களில் 7தான் குஜராத்துக்குக் கிடைத்தது. சண்டிகர் மாநிலம் கூட 10 தங்கப் தக்கங்களைத் தட்டிச் சென்றது" என்றும் மக்கான் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக