புதன், ஜூலை 10, 2013

பெட்டிக்குள் சுருங்கி விட்ட பிணமலரின் தலைப்புச் செய்தி! (Exclusive)

சென்னை ஒயிட்ஸ் ரோட்டை ஒட்டிய கட்டிடத்தில், போர்க்கால அடிப்படையில் பரபரவென்று இயங்கி கொண்டிருந்தது பிணமலர் அலுவலகம். உண்மையின் ஆட்டுக்கல்... ஸாரி உரைகல் அலுவலகம்! உள்ளே நுழையும் போதே பலரிடமும் தெரியும் அந்தச் சுறுசுறுப்பு, நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

பின்னே இருக்காதா? 2014 இன் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறதே!  அதற்குள் முடிக்க வேண்டிய பணிகள், அடைய வேண்டிய இலக்குகள் என பல்வேறு அழுத்தங்கள் இருப்பதை உணர்ந்து பொறுப்போடு செயல்படுகின்றனர். இதே ஈடுபாட்டுடன்தான் கூடங்குளம் ப்ராஜக்ட்டில் சரியாக திட்டமிட்டு வேலைசெய்ததில் முந்தைய வருடங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு காணிக்கையை (போனஸ்)அள்ளி கொடுத்திருந்தார்கள்.

கட்டிடத்தினுள்ளே ஒரே ஒரு ரூம் மட்டும் எப்போதும் மிகச் சூடாக இருக்கும். பிரிண்ட்டிங் மிஷின் உள்ள ரூம் என்று நினைத்திருந்தால் ஏமாந்தீர்கள். அது 'பைத்தி' மாமா ரூம்.

"என்னக் கருமம்டா இது? வழவழான்னு ஒரு நியூஸு? இதை அப்படியே மாத்தி நான் சொல்ற மாதிரி எழுதிக்கோ!" என்று போனில் யாரிடமோ கடிந்து கொண்டிருந்தார் பைத்தி மாமா. இவர் ஸ்பைடர்மேன் படத்தில் வரும் ஜோனாஹ் ஜேம்ஸன் போல கெடுபிடியான எடிட்டர். என்ன ஒண்ணு, வாயில் அந்தக் கரும்பு போன்ற சுருட்டு மட்டும் இல்லை.

"பைத்தி மாமா! ஹாட் நியூஸோட வந்திருக்கேன்" என்றவாறு கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தான் கத்தியமூர்த்தி... ஜோல்னா பையைத் தோளிலிருந்து இறக்கி அருகில் உள்ள சீட்டில் வைத்து விட்டு பைத்தியிடம் நெருங்கி கையினால் எழுதிக்கொண்டு வந்திருந்த பேப்பர்களைத் திணித்தான்.

"அப்பிடி என்னடா ஹாட்?" மூக்கு நுனியில் இறங்கிப் போயிருந்த கண்ணாடியில் இறுக்கமான அந்த பார்வை.

"பைத்தி மாமா! கொதிக்கிற நியூஸ்... ராமேஸ்வரத்துல நம்ம இந்து முன்னணி பிரமுகரை, பயங்கரமான ஆயுதங்களால வெட்டி கொன்னிருக்காங்க மாமா! அப்படியே என் ரத்தம் கொதிக்க கொதிக்க ஓடி வந்திருக்கேன்!" என்றவாறு அமர்ந்தான்.

கேட்ட மாத்திரத்தில் குடித்துக் கொண்டிருந்த ஃபில்ட்டர் காப்பியினை டம்ளரோடு தூக்கி மூலையில் வீசிவிட்டு போனை எடுத்தார் பைத்தி. அநேகமா அது பிரிண்டிங் செக்'ஷனாகத் தான் இருக்கும்.

"அடேய்....நாராயணா! பிரஸுக்குள்ளே பிளேட்ஸ் போயிடுத்தா? அந்தக் கருமாந்திரத்தை அப்படியே நிறுத்திக்கோடா! பேஷான தலைப்புச் செய்தி ஒண்ணு நம்ப கத்தியமூர்த்தி அம்பி கொண்டுவந்திருக்கு எழுதிக்கோடா!

"ராமேஸ்வரத்தில் இந்து முன்னணி பிரமுகர் படுகொலை! பயங்கர ஆயுங்களுடன்...

"ஓகே மாமா. மீதிதான் நமக்கு அத்துப்படியாச்சே!"

"சொதப்பிடாதீங்கடா! அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிம்கார்ட், சீடி இதெல்லாம் சேர்த்துக்க மறந்துடாதீங்கடா!"

"கவலைய விடுங்க மாமா! செய்தியை முழுசாக் கேளுங்கோ.. இந்துமுன்னணி பிரமுகர் படுகொலை. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் வெறியாட்டம்! அப்புறம்...வந்து...."

"என்னடா! அப்புறம் விழுப்புரம்னு இழுக்கிறே! சீக்கிரமாச் சொல்லு. புத்தகயா குண்டுவெடிப்பு செய்திக்கு அப்டேட் கொடுக்கணும்"

"மாமா செய்தி இடிக்கிறதே! ராமேஸ்வரம்னு இருக்கிறதால சிங்கள ராணுவம்னு போடலாமா?"

"ஏண்டா! ஈழப்போர் டீலிங்கில் ராணுவ தரப்பு செய்திகளை ஒழுங்காப்போடலேன்னு பசில் விசில் அடிச்சான். நீயும் கொளுத்துறியே! மண்ணாங்கட்டி வாசகனுங்க அதெல்லாம் யோசிக்க மாட்டானுங்க. மறக்காம செய்திக்குப் பக்கத்துல ஒரு கவர்ச்சி விளம்பரத்தைப் போட்டுட்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் அல்லது இஸ்லாமிய தீவிரவாதிகள்னு எதாச்சும் போட்டுத்தொலை"
"பைத்தி மாமா... சித்த பொறுங்கோ!" இடையில் குறுக்கிட்ட கத்தியமூர்த்தியின் குரலை அலட்சியம் செய்து போனில் தொடர்ந்தார் பைத்தி மாமா.

"தலைப்பப் படிச்சா அவனவன் பீதியில் அலறணும்... ஃபர்ஸ்ட் பேஜ்... பெரிய ஃபாண்ட் ரெட் கலர்.. மறுபடி மறுபடி இதச் சொல்லிட்டே இருக்க மாட்டேன் ஆமா!

"தலைப்பு ஓக்கே மாமா. கொஞ்சம் டீடெய்ல் கொடுங்க"

"என்னது டீடெய்லா? மண்ணாங்கட்டி! ஏண்டா அம்பி - ஒவ்வொரு முறையும் நோக்கு பாடம் நடத்தியே என் தாலி அறுந்து போகுதுடா. ஒருவரில செய்தி கேட்டா பில்ட்அப் பண்ணத் தெரியலை; பிணமலர்ல இத்தன வருசம் வேலை செஞ்சி என்ன கிழிச்சே? வழக்கம்போல இந்தியன் முஜாகிதீன், ஹூஜி பேரு இருக்கணும் புரியறதா? தேவைப்பட்டா அல்-உம்மாவயும் சேர்த்துக்க. ரெண்டாவது மூணாவது பாராவில ஆயுதங்கள் பாகிஸ்தானிலிருந்து பெறப்பட்டது என்று உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தாருன்னு சமத்தா போட்டுக்க!

"அந்த உளவுத்துறை அதிகாரி பேரு என்ன மாமா?"

"உருப்பட்ட மாதிரிதான்! பெயர்சொல்ல விரும்பாத அதிகாரின்னு போடுடா. இன்னுமாடா இதுகூட நோக்கு தெரியல?
ஆன்லைன்ல பதிச்ச கையோட 15 கமெண்ட்டுகளை நீயே போட்டுடு.. இந்தியாவை பயங்கரவாதத்துல இருந்து காப்பாத்த ரேம்போ மோடிதான் சரியான ஆளுன்னு ஒரு 8 வாசகனுங்க வெவ்வேற பேர்ல சொல்லணும்"

"மாமா! போனவாரம்தானே ரேம்போவோட கோவணத்தைக் கிழிச்சானுங்க. திரும்பவும் கிழியணுமா?"

"ஒன்னய சிறுவர் மலர் செக்சன்ல போட்டாத்தான் சரிவரும். அதுபோன வாரம். இது இந்தவாரம். புத்தகயாவுல குண்டு வெடிச்சிருக்கிறதாலே அடுத்த வாரம்வரைக்கும் நாம கொடுக்குறதுதாண்டா செய்தி. மசமசன்னு நிக்காம உடனே டைப் செட் பண்ணி பிளேட்ஸ்ல வுடு" என்று போனை வைத்தவர், கத்தியமூர்த்தியின் பக்கம் திரும்பினார்.

"என்னடா அபிஷ்ட்டு! நான் பேசும்போது நடுவுலே என்னமோ புளியோதரை ஏப்பம் உட்டாயே என்ன அது?"

"இல்ல மாமா... கொன்னவனுங்க நம்மவா...பேரு ராமச்சந்திரன், சண்முகநாதன். நீங்க போன்ல சொன்னீங்களே அந்தப் பேருங்க இல்லை. சேதி போலீஸ்காரங்க வரைக்கும் போய் விசாரணை நடக்குது மாமா!"

பைத்தி மாமா கண்கள் நொடியில் சிவந்து விட்டன. கத்தியமூர்த்தியின் முகத்தில் துப்பிய கையோடு கையில் இருந்த கத்தையான பேப்பர்களை விசிறி அடித்தார்.

"த்தூ! இதெல்லாம் ஒரு செய்தின்னு கொண்டுவந்து என்னோட ரூம்ல நொழஞ்சி வேற கொடுக்கிறே! காலணாபெறாத குப்பை!" என்றவாறு மறுபடி போனை எடுத்தார்.
"பகவானே! எலக்ஷன் டைம் நெருங்கிண்டிருக்கு.. வாங்கின பெட்டிக்கு விசுவாசமா இருக்க அவாளுக்காக, அவனவன் செண்ட்ரல்ல இருந்து ஸ்டேட் வரை உயிரைக் கையில பிடிச்சி கிட்டு சாவறான். ஒன்னுக்கும் உதவாத அந்தக் குப்பைய உள்பக்கம் எங்கேயாவது பொடி எழுத்துல தள்ளிடு" என நாராயணனிடம் பைத்திமாமா போனில் பொரிந்து கொண்டிருக்க, கீழே குப்பையாய் சிதறிக் கிடந்த பேப்பர்களை அள்ளிக் கொண்டு ரூமை விட்டு வெளியேறினான் கத்தியமூர்த்தி.

"ஹ்ம்! இந்த ஈனப் பொழப்பு பொழக்கிறதுக்கு நடிகைங்க மாதிரி உடம்ப காட்டி பொழைக்கலாம். பொய்யி கலக்காம உரைகல்லு மாதிரி அது எவ்வளவோ நேர்மையா இருக்கும்!" கத்தியமூர்த்தி பரிதாபமாய் புலம்பிக்கொண்டு சென்றது அலுவகத்தில் உள்ளவர்கள் அனைவருக்குமே கேட்டது.
குறிப்பு: இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. நிகழ்வுலகில் எதற்கேனும் ஒப்பாக தெரிந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல! :-)
-அபூ ஸாலிஹா
Info : inneram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக