சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் 92 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இவர்களில் 6 ஆயிரத்து 500 பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சித் தகவலையும் ஐ.நா. வெளியிட்டுள்ளது.
ஐ.நா.வின் அகதிகள் நிவாரணத்துக்கான தூதர் அண்டானியோ கட்டரர்சின் கணிப்புப்படி, உள்நாட்டுப் போர் காரணமாக சிரியாவைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் தினசரி அகதிகள் ஆகும் நிலை உள்ளதாகவும், குறைந்தபட்சம் 68 லட்சம் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் அவசியம் என்றும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் 42 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
சர்வதேச உணவுத் திட்ட அமைப்பின் ஆய்வுப்படி, சிரியாவில் 40 லட்சம் பேர் அடிப்படை உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுவது தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக