இது தொடர்பாக SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு நரேந்திர மோடி “ராய்ட்டர்” செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துகள் கண்டிக்கத்தக்கது! மனிதத்தன்மையற்றது!! மோடி பெரும் சிந்தனையாளர், தேசியவாதி நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் என்று BJP மற்றும் அதன் அதரவு ஊடகங்களால் ஏற்ப்படுத்தப்பட்ட பிம்பத்தை அவர் உடைத் தெரிந்துள்ளார்.
குஜராத் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட 3000 முஸ்லிம்களின் உயிர்களை காரில் அடிப்பட்ட ஒரு நாய்குட்டிக்கு ஒப்பிட்டதின் மூலம் அவர் மனித்தன்மையற்றவர் என்பதும், சிந்தனை தெளிவற்றவர் என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மனித உயிர் பலியானத்திற்கும், ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதற்க்கும், பல்லாயிரம் கோடிரூபாய் சொத்துக்கள் சூரையாடப்பட்டதிற்க்கும், மன்னிப்புகோரும் மனிதத் தன்மை தன்னிடம் இல்லை என்பதை மீண்டும் அவர் நிருபித்துள்ளார்.
அவர் தன்னை ஹிந்து தேசியவாதி என்று பகிரங்கப்படுத்துவது மற்றவர்கள் தங்களை முஸ்லிம் தேசியவாதி, கிறிஸ்தவ தேசியவாதி, பௌத்த தேசியவாதி என்று பிளவுபடுத்திக்கொள்ளத்தான் பயன்படும். அவரது தேசபக்தி ஆட்சியில் நலிவடைந்த சமூகங்களுக்கு பிரத்தியேக சலுகைகளோ , திட்டங்களோ இருக்காது என்பது ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு.
இப்படி சலுகைகள் வழங்குவதற்கு பெயர் “தாஜா” செய்வது என்றால், நலிவடைந்த தலித் மற்றும் பழங்குடிஇன சமூகங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் திட்டங்கள் பற்றி BJP யும் மோடியும் தங்களது நிலைப்பாட்டை விளக்கவேண்டும். மோடியின் இந்த கருத்துக்கு SDPI கட்சி தனது வலுவான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. BJP யின் இந்த பிரதமர் வேட்பாளரின் சிந்தனையையும் அவர் மனிததன்மையற்றவர் என்பதையும் புறிந்து கொண்டு இவர்களை நாட்டுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக