கோலாலும்பூர்: மலேசிய இந்திய முஸ்லிம் மதரசா பேரவை (MIM) சார்பாக மலேசிய தலைநகர் கோலாலும்பூரில் நேற்று (6/7/13) "புனித ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி" நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜஹான் மற்றும் லால்பேட்டை உஸ்தாத் ஜமாலுதீன் ஆகியோர் ரமலானின் சிறப்புகளை பற்றியும், எவ்வாறு நாம் ரமலான் மாதத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், தனிமனித ஒழுக்கத்தை பற்றியும் சிறப்புரையாற்றினார்கள்.
மலேசிய இந்திய முஸ்லிம் மதரசா பேரவையின் தேசிய தலைவர் ஜமால் அப்துல் ஹமீது அவர்கள் நிறைவுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை மலேசிய இந்திய முஸ்லிம் மதரசா பேரவையின் கொள்கை பரப்பு செயலாளர் வேங்கை இப்ராஹிம் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக