ஸ்ரீநகர்: ராணுவத்தினரின் அநியாய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பு கஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது.
ஹுர்ரியத்தின் இரு அமைப்புகளும், ஜம்மு-கஷ்மீர் விடுதலை முன்னணியும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. சும்பால், ஹஜின், நய்த்காய் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஹஜின் பகுதியில் எதிர்ப்பாளர்கள் ராணுவ பள்ளிக்கூடத்திற்கு தீ வைக்க முயன்றதாக போலீஸ் கூறுகிறது. இரண்டு வகுப்பறைகளில் ஃபர்னிச்சர்கள் தீக்கிரையாகின. இளைஞர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ராணுவத்தினர் மீது போலீஸ் வழக்குப் பதிவுச் செய்துள்ளது. ராணுவம் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே புல்வாமா மாவட்டத்தில் நடந்த மோதலில் போலீஸ் காரர் கொல்லப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக