பிரதமர் வேட்பாளர் கனவில் வலம் வரும் குஜராத் முதல்வர் மோடியின் எதிர்பார்ப்புகளுக்கு பலத்த பின்னடவை ஏற்படுத்தும் அதிர்ச்சிகர உண்மைத் தகவல்கள் அடுத்தடுத்து வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. கேதார்நாத்தில் சாகச வீரனாக மாறி 15 ஆயிரம் பேரை காப்பாற்றினார் என்று போலியான வீர கதையை ஊடகங்களில் பரப்புரைச் செய்த சம்பவம் பெரும் அவமானத்தையும், பா.ஜ.கவுக்கு தொந்தரவாகவும் மாறியுள்ளது.
மோடியின் ஒட்டுமொத்த விளம்பர குத்தகையை ஏற்றுள்ள அமெரிக்க நிறுவனமான ஆப்கோ மோடியை கைகழுவியதன் மூலம் பா.ஜ.க இத்தகைய மோசமான விளம்பர ஸ்டண்டுகளின் பொறுப்பை ஏற்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த அவமானம் போதாது என்று மோடியின் பிரதமர் கனவுக்கு வேட்டுவைக்கும் அதிர்ச்சிகர உண்மை தகவல்கள் குஜராத்தில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன. 2003-05 காலக்கட்டத்தில் குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர்கள் குறித்து விசாரணைகள் மோடியை இறுக்குகின்றன. இவ்வழக்குகளில் முக்கியமான 5 வழக்குகளை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த போலி என்கவுண்டர்களில் ஐ.பியின் குஜராத் பிரிவு அதிகாரியாக இருந்த தற்போதைய இண்டலிஜன்ஸ் பீரோ சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமாருக்கு முக்கிய பங்கு இருப்பது நிரூபணமாகியுள்ளது. இவர் மோடிக்கு மிகவும் நெருக்கமான நபர். இந்த உறவின் பின்னணியை தொடர்ந்து ஆராய்ந்தால் மோடிக்கு நிலைமை மேலும் சிக்கலாகும்.பெரும்பாலான போலி என்கவுண்டர் படுகொலைகளில் ராஜேந்தர் குமாரின் நேரடியான தலையீடுகள் உள்ளன. நரேந்திர மோடியை கொல்லவந்தவர்கள் என்று பொய் கூறி அப்பாவிகள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேர், சொராஹ்புதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி, ஸாதிக் ஜமால், துளசி பிரஜாபதி உள்ளிட்டோ கொல்லப்பட்ட போலி என்கவுண்டர் வழக்குகளை தற்போது சி.பி.ஐ விசாரித்து வருகிறது.
இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேரின் போலி என்கவுண்டர் படுகொலைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜி.எல்.சிங்காலின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மோடி மற்றும் அவரது வலது கரமான அமித் ஷாவின் பங்கினைக் குறித்து மேலும் பல உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன.
போலி என்கவுண்டர்கள் நடக்கும்போது க்ரைம் ப்ராஞ்ச் துணை கமிஷனராக இருந்த ஜி.எல்.சிங்காலின் மகன், தனது தந்தையின் கொடிய நடவடிக்கைகளில் மனம் நொந்து தற்கொலைச் செய்துகொண்டார். இது சிங்காலுக்கு மனதில் மாற்றத்தை உருவாக்கியது.
ஜூலை 4-ஆம் தேதிக்கு முன்பாக ஜி.எல்.சிங்காலின் வாக்குமூலம் மற்றும் இது தொடர்பான ஆடியோ டேப் உள்ளிட்ட ஆதாரங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். தற்போது அமைச்சர்களாக பதவி வகிக்கும் பிரதீப் சிங் ஜடேஜா, பூபிந்தர் சுடாசாமி, முன்னாள் அமைச்சர்களான பிரஃபுல் படேல், மோடிக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.சி.மர்மு, வழக்கறிஞரான கமல் திரிபாதி ஆகியோரின் குரல்கள் இந்த டேப்பில் அடங்கியுள்ளது.
ஐ.பி அதிகாரி ராஜேந்தர் குமார் மற்றும் போலி என்கவுண்டர் தலைவனான டி.ஜி.வன்சாரா ஆகியோர் இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடலின் ஆடியோ டேப்பையும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும். இந்த உரையாடலில் மோடி மற்றும் அமித்ஷாவின் பங்கினைக் குறித்த தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
ராஜேந்தர் குமாரை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க ஐ.பி பிரதமர் வரை சந்தித்து அழுத்தம் கொடுத்தது. ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து சிறப்பு அனுமதியைப் பெற்று சி.பி.ஐ இவ்வழக்கில் ராஜேந்தர் குமாரின் பங்கினைக் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறது. அடுத்த மாதம் இறுதியில் ஐ.பி பதவியில் இருந்து ராஜேந்தர் குமார் ஓய்வு பெற்றதும் கைது செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.
சி.பி.ஐ தாக்கல் செய்யவிருக்கும் குற்றப்பத்திரிகையை இந்திய தேசமே உற்று நோக்கியுள்ளது. கூடவே பா.ஜ.கவும் பீதியுடன் பார்க்கிறது. தங்களின் பிரதமர் கனவு வேட்பாளர் மோடியின் ஏற்கனவே கிழிக்கப்பட்டுள்ள முகமூடி மீண்டும் கிழியுமா? என்பதுக் குறித்த பீதியுடன்.
Source : NewIndia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக