செவ்வாய், ஜூன் 19, 2012

என் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து எஸ்.ஐ.டி விசாரிக்க வேண்டும்’ – மேதா பட்கர் கோரிக்கை !

Medha Patkar demands SIT probe in 2002 assault caseஅஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு சபர்மதி ஆசிரமத்தில் வைத்து தனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ.ஐ.டி) விசாரணை நடத்தவேண்டும் என பிரபல சமூக ஆர்வலரும், ’நர்மதா பச்சாவோ அந்தோலன்’ போராட்டத் தலைவருமான மேதா பட்கர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.இத்தாக்குதல் குறித்து குஜராத் போலீஸ் பாரபட்சமாக விசாரணை நடத்தியதாக குற்றம் சாட்டி
அவர் மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
2002-ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூர இனப்படுகொலையை கண்டித்து அதே ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி சபர்மதி ஆசிரமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சங்க்பரிவார பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கூட்டத்தில் மேதாபட்கர் பங்கேற்றதைத் தொடர்ந்து பா.ஜ.க கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் குஜராத் மாநில பிரபல மனித உரிமை ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் காயமடைந்தனர். இவ்வழக்கில் சபர்மதி போலீஸ் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்திருந்தது.
கடந்த மாதம் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்தபொழுது மேதா பட்கர், தொடர் விசாரணைக்கான மனுவை அளித்தார். குற்றப்பத்திரிகையில் போலீஸ், முக்கிய பகுதிகளை தவிர்த்துள்ளது என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது சதித்திட்ட குற்றம் சுமத்தவில்லை என்றும் மேதாபட்கரின் வழக்கறிஞர் கோவிந்த் பர்மார் கூறினார்.
இவ்வழக்கின் விசாரணை மீண்டும் அடுத்த மாதம் ஏழாம் தேதி விசாரணைக்கு வரும்.
இவ்வழக்கில் பா.ஜ.கவின் முன்னாள் நகர மேயர் அமித் ஷா, இளைஞர் பிரிவு தலைவர் அமித் தாக்கர் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக