லண்டன்:2003-ஆம் ஆண்டு ஈராக் மீது தாக்குதலை தொடுக்க ஊடக முதலை ரூபர்ட் மர்டோக் அன்றைய பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளெயருக்கு நிர்பந்தம் அளித்தார் என்று செய்தி வெளியாகியுள்ளது.டோனி ப்ளேயர் ஆட்சிக்காலத்தில் தூதரக பிரதிநிதியாக இருந்த அலஸ்டிர் கேம்பல், ‘அலஸ்டிர் கேம்பல்ஸ் கவர்ன்மெண்ட் டயரி’ என்ற தொடரின் கடைசி பகுதியில் இதனை தெரிவித்துள்ளார். கார்டியன் தின
இதழில் கேம்பலின் தொடர் கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஈராக் ஆக்கிரமிப்பை தாமதித்தால் ஏற்படும் விளைவுகளை குறித்து மர்டோக், தொலைபேசியில் ப்ளேயருக்கு அச்சுறுத்தியதாகவும் கேம்பல் கார்டியனில் எழுதியுள்ள தொடர் கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால், ஈராக் ஆக்கிரமிப்புத் தொடர்பாக யார் மீதும் அழுத்தம் கொடுக்கவில்லை என்று மர்டோக், தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கை விசாரிக்கும் லேவ்ஸன் கமிஷனிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக