புதன், ஜூன் 20, 2012

பாகிஸ்தான்: கிலானியை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது உச்சநீதிமன்றம் !

Pakistan SC disqualifies PM Yousuf Raza Gilani after his convictionஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியை தகுதி நீக்கம்செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிலானி நீதிமன்ற அவமதிப்பு தண்டனைக்கு ஆளானார் என்பதுகுறிப்பிடத்தக்கது.பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உள்பட பல தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளைஅந்நாட்டு அரசு விசாரணைக்கு எடுக்காமல் வழக்கை முடித்துவிட்டது. அந்த வழக்குகளைஎல்லாம் மறுபடியும் விசாரணைக்கு எடுக்குமாறு உச்ச
நீதி்மன்றம் அரசுக்கு உத்தரவிட்டுகடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது.
ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி பிரதமர் கிலானிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் கொடுத்ததுடன் அவரை ஜனவரி 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.  அதன்படி அவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்தநீதிமன்றம் கிலானி நீதிமன்றத்தை அவமதி்த்துவி்ட்டார் என்று கடந்த ஏப்ரல் மாதம்26ம் தேதி தீர்ப்பு வழங்கியது.உச்ச நீதிமன்றத்தின்அவமதிப்புக்கு ஆளாகி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட கிலானியின் எம்.பி. பதவியை சபாநாயகர் பறிக்கவேண்டும் என பாகிஸ்தான் அரசியல்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிடதடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த விவகாரம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மக்களவையில் எதிரொலித்தது.இதற்கு பதிலளித்த சபாநாயகர் பெஞ்மிதா மிர்ஷா, ‘பிரதமர் கிலானியின் எம்.பி. பதவியைரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என்று அறிவித்திருந்தார்.
இதை எதிர்த்து தெஹ்ரீக் இ இன்ஸாப், பி.எம்.எல்-நவாஸ்ஷெரீஃப் பிரிவு கட்சி உள்ளிட்டவை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்,   கிலானி நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இன்று  அறிவித்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கிலானி பதவி இழந்துவிட்டதால், அவருக்குப்  பதிலாக பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த எம்.ஷகாபுதீன் அல்லது சி.ஏ. முக்தார்  ஆகிய 2 பேரில் ஒருவரை அப்பதவியில் அமர்த்தலாமா என ஆலோசிக்கப்பட்டு  வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக